Published : 10 Feb 2022 06:15 AM
Last Updated : 10 Feb 2022 06:15 AM
காரைக்குடி நகராட்சியில் சுயேச்சையாக நிற்கும் தனது கணவரை எதிர்த்து 4-வது முறையாக அவரது மனைவி போட்டியிடுகிறார்.
காரைக்குடி நகராட்சி 11-வது வார்டில் மெய்யர் என்பவர் தொடர்ந்து 3 முறை சுயேச்சையாக வெற்றிபெற்றார். தற்போது மீண்டும் போட்டியிடுகிறார். இவர், தனது வெற்றிக்கு ஒற்றைப்படை சென்டிமென்டை காரணமாகக் கருதி வருகிறார்.
இதற்காக வேட்பாளர்களின் எண்ணிக்கை இரட்டைப்படையாக வந்தால் ஒருவர் வாபஸ் பெறுவதற்காக தனது மனைவி சாந்தியை தனக்கு எதிராக நிறுத்தி வருகிறார். ஏற்கெனவே 3 முறை நடந்த தேர்தலில் தனது மனைவியையும் சேர்த்ததால்தான் ஒற்றைப்படை வந்தது. இதனால் தனது மனைவியை வாபஸ் வாங்க வைக்காமல் தன்னை எதிர்த்துப் போட்டியிட வைத்தார்.
அதேபோல் இந்த முறையும் அவரது மனைவி போட்டியிடுகிறார். தற்போது 9 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இந்த முறையும் அவரது சென்டிமென்ட் எடுபடுமா? என்பது தேர்தல் முடிவில் தெரியவரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT