Published : 30 Jan 2022 09:15 AM
Last Updated : 30 Jan 2022 09:15 AM
திருச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட திமுக கூட்டணி கட்சிகளுக்கான வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளன.
திருச்சி மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் திமுக கூட் டணி கட்சிகளுக்கு வார்டுகளை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக கலைஞர் அறிவாலயத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
திமுக முதன்மைச் செயலாள ரும், அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச் சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.
இதில் திமுக சார்பில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைரமணி, வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி ந.தியாக ராஜன் எம்எல்ஏ, மாநகரச் செய லாளர் மு.அன்பழகன், எம்எல்ஏக் கள் சவுந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், கதிரவன் உள்ளிட்டோரும், காங்கிரஸ் தரப்பில் ஜவகர், கலை, கோவிந்தராஜ், மதிமுக சார்பில் வெல்லமண்டி சோமு, டி.டி.சி சேரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர், ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திரஜித், சுரேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அருள், தமிழாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தெற்கு மாவட்டச் செயலாளர் கே.எம்.கே.ஹபிபூர் ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எம்எல்ஏ அப்துல்சமது உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில், திருச்சி மாநகராட்சியி லுள்ள 65 வார்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு 4, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகியவற்றுக்கு தலா 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 1 வார்டுகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ், மதி முக ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்கு கூடுதலாக இடம் கொடுக்க வேண்டும் என கேட்டு வருகின்றன. இதுதவிர நகராட்சி கள், பேரூராட்சிகளுக் கான வார்டு பங்கீடும் மேற்கொள் ளப்பட்டது.
கறார் காட்டிய திமுக
இதுகுறித்து திமுக கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் கூறிய தாவது: காங்கிரஸ் கட்சிக்கு 3 மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு கட்சி நிர்வாகிகள் உடன்படாததால், மேலும் ஒரு வார்டு கூடுதலாக ஒதுக்கப்பட்டது. ஆனாலும் அந்த கட்சிக்கு எந்தெந்த வார்டுகள் என்பதில் இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.
கடந்த தேர்தலில் மதிமுக தனித்து போட்டியிட்டு 4 வார்டு களில் வென்றிருந்த நிலையில் இம்முறை 5, 30 ஆகிய 2 வார்டுகளை மட்டுமே ஒதுக்க முடியும் என அமைச்சர் கே.என்.நேரு கறாராக கூறிவிட்டார். தன்னிடம் பல ஆண்டுகளாக உதவியாளராக இருந்துவரும் அடைக்கலத்துக்கு அரியமங்கலத்தில் ஒரு வார்டு ஒதுக்கித் தரும்படி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழியிடம் வைகோவே நேரடி யாக பேசியிருந்தார். அப்படி யிருந்தும்கூட அடைக்கலத்துக்காக கேட்ட வார்டு ஒதுக்கப்படவில்லை. இதனால், அந்த கட்சியினர் வருத்தத்தில் உள்ளனர்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் 2 வார்டுகள் கேட்கப்பட்டி ருந்தன. ஆனால் 51 அல்லது 52 ஆகியவற்றில் ஏதாவது ஒரு வார்டு மட்டுமே ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இவை இரண்டும் பெண்களுக்கான வார்டு என்பதால் அவர்களிடமும் மனவருத்தம் காணப்படுகிறது.
விசிக, கம்யூ. திருப்தி
விடுதலை சிறுத்தைகள் கட்சி யினருக்கு அவர்கள் கேட்ட 17, 59 ஆகிய 2 வார்டுகளும் ஒதுக் கப்பட்டுவிட்டன. இந்திய கம்யூ னிஸ்ட் கட்சிக்கு 23, 65 ஆகிய 2 வார்டுகளும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு 35, 47 ஆகிய 2 வார்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஓரளவுக்கு திருப்தியடைந்துள்ளன. மனிதநேய மக்கள் கட்சிக்கு 28-வது வார்டு ஒதுக் கப்பட்டுள்ளது. காங்கிரஸ், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் கூடுதலாக சீட் கேட்டு வருகின்றன. அவர்களுடன் அடுத்தகட்ட பேச்சு வார்த்தை நடத்தப்படலாம் எனவும், அதற்குப்பின் கூட்டணிக் கான வார்டு ஒதுக்கீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் படலாம் எனவும் தெரிகிறது.
முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் ‘சீட்’
குறைந்த இடங்களே ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளதால் பெரும் பாலான கூட்டணி கட்சிகளில் அவற்றின் மாவட்டத் தலைவர்கள், அவர்கள் குடும்பத்தினர் மட்டுமே போட்டியிடும் நிலை ஏற்பட் டுள்ளது. கட்சியிலுள்ள இதர நிர்வாகிகளுக்கு அவர்களால் வார்டு பெற்றுத் தர முடியாத நிலை உருவாகியுள்ளது. அதே போல திமுகவைச் சேர்ந்த சில நிர்வாகிகள், ஏற்கெனவே தங்களது வார்டில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். அவற்றில் சில வார்டுகள், தற்போது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. இதனால் திமுகவி னரிடமும் அதிருப்தி காணப்படு கிறது. காங்கிரஸ், விசிகவுக்கு ஒதுக்கப்படும் வார்டுகளை தங்க ளுக்குக் கேட்டு திமுக நிர்வாகிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் திமுக மற்றும் கூட்டணி கட்சி களைச் சேர்ந்தவர்களே, அவர்க ளது கூட்டணியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக சுயேச் சையாக போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதுபோன்ற சூழல் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT