Published : 07 Jan 2022 11:17 AM
Last Updated : 07 Jan 2022 11:17 AM
மங்கலம்பேட்டையில் நஞ்சான உணவை சாப்பிட்ட தம்பதியினர் உயிரிழந்தனர்.மேலும் 3 சிறுவர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
விருத்தாசலத்தை அடுத்த இலங்கியனூரைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களான சுப்பிரம ணியன் (60), அவரது மனைவி கொளஞ்சி (55) ஆகியோர் கடந்த டிச.29-ம் தேதி வீட்டில் முள்ளங்கி சாம்பார் சமைத்துள்ளனர். சமைத்தஉணவை அன்று இரவே தம்பதியி னரும் மற்றும் அவர்களது பேரன் சரவணகிருஷ்ணன்(6), பக்கத்து வீட்டைச் சேர்ந்த நித்தீஸ்வரன்(9), ப்ரியதர்ஷினி(4) ஆகியோர் சேர்ந்து உணவருந்தியதாகக் கூறப்படுகிறது. உணவருந்திய சில நேரங்களிலேயே கொளஞ்சிக்கு செரிமான பிரச்சினை ஏற்பட் டுள்ளது.
இதையடுத்து அவர் மறுநாள்காலை கள்ளக்குறிச்சி மாவட்டம்கூத்தக்குடி அரசு மருத்துவம னையில் முதலுதவி சிகிச்சைப் பெற்றார். பின்னர் சேலம் மருத்து வமனையில் மேல்சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சைப் பலனளிக்காமல் ஜன.4-ம் தேதி வீட்டிற்குஅழைத்து வந்தனர். இந்நிலையில்அவர் மாலையில் உயிரிழந்துள் ளார். அதே நேரத்தில் ஜன.1-ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்ட சுப்பிரமணியன், விருத்தாசலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜன.5 -ம் தேதி உயிரிழந்தார்.
அதையடுத்து சரவணகிருஷ் ணன், ப்ரியதர்ஷினி மற்றும் நித்தீஸ்வரன் ஆகியோருக்கு ஜன.3-ம் தேதி உடல்நல பாதிப்புஏற்பட்டுள்ளது. இதில் சரவண கிருஷ்ணன் திருச்சியில் தனியார்மருத்துவமனையிலும், நித்தீஸ்வரன், பிரியதர்ஷினி ஆகியோர்கடலூரில் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து சுப்பிரமணியனின் மகன் வேல்முருகன்(38) அளித்தப் புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முள்ளங்கி சாம்பார் சாப்பிட்ட நிலையில் அவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. அவர்கள் சமைத்த உணவு நஞ்சானது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT