Published : 05 Jan 2022 11:38 AM
Last Updated : 05 Jan 2022 11:38 AM
சிவகங்கை பேருந்து நிலையத்தில் ஓட்டுநர், நடத்துநர் இல்லாமல் நகர் பேருந்துகளை நிறுத்தி வைத்ததால் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.
சிவகங்கை அரசு போக்குவரத்துக் கழக பணிமனை மூலம் நகர் பேருந்துகள் உட்பட 76 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பல ஆண்டுகளாக காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் 20 ஓட்டுநர், 35 நடத்துநர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதையடுத்து ஓட்டுநர், நடத் துநர்களுக்கு ஓய்வு கொடுக்காமல் தொடர்ந்து பேருந்துகளை இயக்க அதிகாரிகள் வற் புறுத்தி வருகின்றனர். இருந்தபோதிலும் ஓட்டுநர், நடத்துநருக்கு பற்றாக்குறை நிலவுகிறது.
இதனால் நேற்று பகலில் ஒட்டாணம், தாயமங்கலம், தம றாக்கி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டிய பேருந்துகள் சிவகங்கை பேருந்து நிலையத் திலேயே நிறுத்தப்பட்டிருந்தன. பேருந்துகளை இயக்காததால் கிராமங்களுக்கு செல்லக் கூடிய பயணிகள் பல மணி நேரம் காத் திருந்தனர். இதேபோல, பல வழித்தடங்களில் பேருந்துகள் அடிக்கடி நிறுத்தப்பட்டு வருகின் றன. மேலும் நகர் பேருந்துகளில் அதிகளவில் பெண்கள் இலவசமாக பயணிக்கின்றனர். இதனால் பற்றாக்குறையை காரணம் காட்டி, நகர் பேருந்துகளை இயக்காமல் அடிக்கடி நிறுத்தி விடுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து பணியாளர்களிடம் கேட்டபோது, ‘ஆட்கள் பற்றாக்குறையால் பணிப் பளுவால் சிரமப்படுகிறோம். ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT