Published : 02 Jan 2022 09:00 AM
Last Updated : 02 Jan 2022 09:00 AM

சிவகங்கை: மனநிலை பாதித்த மகனோடு தவித்த பெண்ணுக்கு வீடு கட்டி தந்த ராணுவ வீரர்கள்

சிவகங்கை

சிவகங்கை அருகே குடியிருக்க வீடின்றி மனநிலை பாதித்த மகனோடு தவித்த பெண்ணுக்கு, சொந்த செல வில் ராணுவ வீரர்கள் வீடு கட்டிக் கொடுத்தனர்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் 2 ஆண்டுகளுக்கு முன்பு ‘வைகை பட்டாளம்’ என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு மூலம் ஒருங்கிணைந்தனர். இவர்கள் முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வதோடு, ஊருணி தூர்வாருதல், ஏழைகளுக்கு உதவி, குடிநீர் வசதி, கல்வி உதவி உள்ளிட்ட சமூகப் பணி களிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.

சிவகங்கை அருகே காடனேரியைச் சேர்ந்தவர் வளர்மதி (58). இவரது கணவர் சுப்ரமணியன் இறந்து விட்டார். இந்நிலையில் மனநிலை பாதித்த மகன் ராஜாவோடு (28) வசித்து வரும் வளர்மதி, கூலி வேலை செய்து குடும்பத்தை கவனித்து வரு கிறார். தனக்கு சொந்தமான சிறிய இடத்தில் குடிசையில் வசித்து வந் தார்.

அண்மையில் பெய்த மழையில் தென்னை தட்டிகள் சேதமடைந்தன. இதனால் இவர்கள் வீடின்றி மழை, வெயிலில் தவித்து வந்தனர்.

இதையறிந்த வைகை பட்டாளம் ராணுவ வீரர்கள் தங்களது சொந்த செலவில் வீடு கட்டி கொடுத்துள்ளனர். புத்தாண்டான நேற்று புதிய வீட்டை வளர்மதியிடம் ராணுவ வீரர்கள் அழகுசுந்தரம், விஜய் ஆகியோர் ஒப்படைத்தனர். வீட்டில் மின் வசதியும் செய்து கொடுத்துள்ளனர்.

நாட்டையும், மக்களையும் எல்லையில் அன்னியர்களிடம் இருந்து காப்பதோடு மட்டுமின்றி, நாட்டுக்குள் ளேயும் தங்களால் முடிந்த சமூகப் பணிகளை செய்துவரும் ராணுவ வீரர்களை அனைவரும் பாராட்டினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x