Published : 01 Jan 2022 10:21 AM
Last Updated : 01 Jan 2022 10:21 AM

சிவகாசி அருகே துணைத் தலைவர் ஒத்துழைப்பு தரவில்லை என கூறி பொறுப்புகளை திரும்ப ஒப்படைத்த பெண் ஊராட்சி தலைவர்

விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்புகளை ஒப்படைப்பு செய்த புதுக்கோட்டை ஊராட்சித் தலைவர் காளீஸ்வரி.

விருதுநகர்

சிவகாசி அருகே ஊராட்சி நிர்வாகத்துக்கு போதிய ஒத்துழைப்பு அளிக்காத துணைத் தலைவரால், தனது பொறுப்புகளை உயர் அதிகாரியிடம் ஒப்படைத்தார் ஊராட்சி பெண் தலைவர்.

சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுக்கோட்டை ஊராட்சித் தலைவர் காளீஸ்வரி. இவர், பாஜக மாவட்ட மகளிர் அணி தலைவராக உள்ளார்.

நேற்று காலை விருதுநகர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு பாஜகவினருடன் காளீஸ்வரி சென்றார். அங்கு உதவி இயக்குநர் (பொறுப்பு) அரவிந்த்திடம் தனது பொறுப்புகளை திரும்ப ஒப்படைப்பதாகக் கூறி காளீஸ்வரி கடிதம் அளித்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: புதுக்கோட்டை ஊராட்சியின் துணைத் தலைவர் சேத்தூரான். இவர் ஊராட்சி நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுக்கிறார். ஊராட்சிக் கூட்டங்களில் வருகைப் பதிவேட்டில் மட்டும் கையெழுத்திடுகிறார். தீர்மானங்களை நிறைவேற்று வதற்கான ஆவணத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்கிறார். ஊராட்சி நிர்வாகம் மேற் கொள்ளும் செலவினங்களுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட மறுக்கிறார். ஊராட்சியால் மேற் கொள்ளப்படும் பணிகளுக்கு கமி ஷன் கேட்கிறார்.

இதன் காரணமாக கடந்த 9 மாதங்களாக மக்களின் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க சொந்த பணத்தை செலவிட்டு வருகிறேன்.

தெருவிளக்கு, குடிநீர் மின் மோட்டார்கள் பழுதை சரி செய் யவும், மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றவும் போதிய நிதி ஆதாரம் இல்லை. நிர்வாகத்துக்கு துணைத் தலை வரின் ஒத்துழைப்பும் இல்லை. அதனால், எனது பொறுப்புகளை ஒப்படைப்பு செய்கிறேன். இவ் வாறு அக்கடிதத்தில் காளீஸ்வரி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x