Published : 01 Jan 2022 10:25 AM
Last Updated : 01 Jan 2022 10:25 AM
சிவகங்கை அழகுமெஞ்ஞானபுரம் பகுதியில் ஏராளமான குடியிருப்பு கள் உள்ளன. இப்பகுதியில் அரசுப் புறம்போக்கு நிலத்தில் சடலத்தைப் புதைக்க வட்டாட்சியர் அளித்த அனுமதியின் பேரில் நேற்று முன்தினம் அந்த நிலத்தில் சடலம் புதைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குடியிருப்புவாசிகள் இரவில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தீர்வு கிடைக்காத நிலையில் வட்டாட்சியரைக் கண்டித்து நேற்று காலை அரசுப் போக்குவரத்துப் பணிமனை முன்பாக மதுரை-தொண்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக நகரத் தலைவர் தனசேகரன் தலைமையில் அக்கட்சியினரும் பங்கேற்றனர். அவர்கள் மயானப் பகுதியை வேறு இடத்துக்கு மாற்றுவதோடு புதைத்த சடலத்தை வெளியில் எடுத்து வேறு இடத்தில் புதைக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
வட்டாட்சியர் மற்றும் போலீஸார் மயானத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதாக தெரிவித்தனர்.
ஆனால், அதை உத்தரவாதமாக எழுதித்தருமாறு பாஜகவினர் கேட்டனர். அதற்கு அதிகாரிகள் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட் டது. பிறகு மாலைக்குள் மயா னத்தை மாற்றுவது குறித்து உத்தரவிடுவதாகவும் சடலத்தை வெளியே எடுப்பது குறித்து உற வினர்களிடம் பேசுவதாகவும் உறுதி அளித்ததால் மறியலைக் கைவிட்டனர். மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT