Published : 31 Dec 2021 02:34 PM
Last Updated : 31 Dec 2021 02:34 PM

அதிவேக இலகு ரக விமானத்தில் உலகை சுற்றும் இளம் விமானி ஜாரா ரூதர்போர்டு கோவை வருகை

கோவை

பெல்ஜியத்தைச் சேர்ந்த இளம் விமானி ஜாரா ரூதர்போர்டு (19). இவர், உலகின் அதிவேக இலகு ரக விமானத்தில் 51 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து உலகை சுற்றிவந்து கின்னஸ் சாதனைபடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பெல்ஜியத்திலிருந்து கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி புறப்பட்ட இவர், 5 கண்டங்கள், 52 நாடுகளை வரும் ஜனவரி இரண்டாம் வாரத்தில் விமானத்தில் பயணித்து கடக்க திட்டமிட்டுள்ளார்.

அவ்வாறு கடக்கும்போது, தனியாக இலகுரக விமானத்தில் இவ்வளவு தூரத்தை கடந்த இளம்பெண் என்ற சாதனையை படைப்பார். பயணத்தின் ஒருபகுதி யாக கோவை வந்தடைந்த அவர், செய்தியாளர்களிடம் நேற்று கூறும் போது, “அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், வான்வெளி தொடர்பான வேலைவாய்ப்பில் உள்ள பாலின இடைவெளியை எடுத்துக்காட்டும் வகையில் இந்த பயணம் அமையும் என நம்புகிறேன்.

பயணத்தின்போது அந்தந்த நாடுகளில் உள்ள இளம்பெண்களை சந்தித்து வான்வெனி, அறிவியல், தொழில்நுட்ப விஷயங்களில் பங்கேற்பது குறித்து எடுத்துரைக்கிறேன். நான் பயணம் செய்யும் விமானத்தின் எரிபொருள் செலவானது, ஒரு போயிங் விமானம், ஓடுதளத்தில் 10 நிமிடம் செல்ல செலவிடப்படும் எரிபொருளின் அளவுக்கு மட்டுமே இருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x