Published : 30 Dec 2021 08:56 AM
Last Updated : 30 Dec 2021 08:56 AM
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில், தூத்துக்குடி பகுதியில் ரேக்ளா போட்டிகளுக்காக பந்தய காளைகளை பலரும் தயார் செய்து வருகின்றனர். இந்த காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, திருச்சி, அரியலூர் போன்ற சில மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.
பந்தயத்தில் ஈடுபடும் காளைகளின் உயரம், திறன், பலம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பெரிய மாடு, நடுத்தர மாடு, பூஞ்சிட்டு மாடு என பிரித்து போட்டி நடக்கிறது. மாடுகளுக்கு ஏற்ப பந்தய தூரம் நிர்ணயிக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, வை குண்டம் பகுதிகளில் ரேக்ளா ரேஸ் எனப்படும் மாட்டு வண்டி பந்தயங்கள் அதிகள வில் நடைபெறுவது வழக்கம்.
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு ஜனவரி மாத தொடக்கத்திலும், ஆடி மாதத்தில் கோயில் திருவிழாக்களின் போதும் மாட்டு வண்டி பந்தயங் கள் ஆங்காங்கே நடத்தப்படு கின்றன. அடுத்த வாரத்தில் இருந்தே மாட்டு வண்டி பந்தயங்கள் தொடங்கிவிடும்.
தயாராகும் காளைகள்
இதையடுத்து, மாட்டு வண்டி பந்தயங்களில் பங்கேற்கும் காளை களை, அவற்றின் உரிமையாளர்கள் இப்போதே தயார் செய்து வருகின்றனர். தூத்துக்குடி, முத்தையாபுரம், காலாங்கரை, செக்காரக்குடி, வல்லநாடு, வைகுண்டம், கடம்பூர், கயத்தாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பந்தய காளைகள் வளர்க்கப்படுகின்றன.
அவற்றை போட்டிக்கு தற்போதே தயார் செய்து வருகின்றனர். காளை களுக்கு நடை பயிற்சி, நீச்சல் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT