Published : 26 Dec 2021 06:49 AM
Last Updated : 26 Dec 2021 06:49 AM

தை அமாவாசையை முன்னிட்டு கயா, காசிக்கு சுற்றுலா ரயில்: மதுரையில் இருந்து ஜன.22-ல் புறப்படுகிறது

சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு கொல்கத்தா, காமாக்யா, காசிஉள்ளிட்ட இடங்களை தரிசித்து,கயாவில் தர்ப்பணம் செய்யும் வகையில் சிறப்பு ரயில் சுற்றுலாவை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகள் நேற்று கூறியதாவது:

கரோனா பரவல் குறைந்து வருவதால், மக்களின் தேவைக்கு ஏற்ப, பல்வேறு இடங்களுக்கு ஐஆர்சிடிசி சார்பில் சிறப்பு சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

சென்னை சென்ட்ரல் வழியாக

தை அமாவாசையை (ஜன.31) முன்னிட்டு மதுரையில் இருந்து ஜன.22-ம் தேதி புறப்படும் சிறப்புசுற்றுலா ரயில், திண்டுக்கல், திருச்சி, கரூர், சென்னை சென்ட்ரல்வழியாக கொல்கத்தா செல்லும்.பின்னர், அங்குள்ள சுற்றுலா தலங்கள், காளிதேவி, காமாக்யாதேவி, காசி விசாலாட்சி, மங்களகவுரி (கயா), அலோபிதேவி (அலகாபாத்), பிமலாதேவி (பூரி) போன்ற சக்தி பீடங்கள், மற்ற ஆலயங்களைத் தரிசிக்கலாம். முக்கிய நிகழ்வாக தை அமாவாசைஅன்று கயா சென்று முன்னோருக்கு தர்ப்பணம் செய்து விஷ்ணு பாதம் தரிசிக்கலாம்.

இந்த சுற்றுலா 12 நாட்கள் கொண்டது. ஒருவருக்கு ரூ.12,285 கட்டணம். ரயில் கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, உணவு உள்ளிட்டவை இதில் அடங்கும். மேலும் தகவல்களை பெற 9003140680, 9003140714 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x