Published : 25 Dec 2021 10:02 AM
Last Updated : 25 Dec 2021 10:02 AM

புதுச்சேரி நகர கூட்டுறவு வங்கியில் அடகு நகைகளை எடுத்து கவரிங் நகை வைத்து மோசடி; காசாளர்கள் இருவர் கைது- 400 பவுன் மீட்பு

புதுச்சேரி

புதுச்சேரி நகர கூட்டுறவு வங்கிக் கிளையில் அடகு வைக்கப்பட்ட நகைகளை எடுத்துவிட்டு அதற்குபதிலாக கவரிங் நகை வைத்துமோசடி செய்ததாக இரு காசாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியில் அடமானம் வைத்திருந்த 400 பவுன்களை போலீஸார் மீட் டுள்ளனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டை மெயின்ரோட்டில் நகர கூட்டுறவு வங்கியின் கிளை உள்ளது. இந்த வங்கியில் 1,500-க்கும் மேற்பட்டோர் நகை களை அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். கடந்த 18-ம் தேதி ஆறுமுகம் என்பவர், தான் அடகு வைத்த நகைகளை மீட்க சென்றார். அப்போது லாக்கரில் இருந்து எடுத்து வரப்பட்ட நகை போலி என தெரியவந்தது. இதுகுறித்து ஆறுமுகம், மேலாளரிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து கூட்டுறவு தலைமை வங்கி அதிகாரிகள் லாஸ் பேட்டை வங்கியில் அடமானம் வைத்த நகைகளை சரிபார்க்கும் பணியை மேற்கொண்டனர். இதில் நகை மோசடி செய்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கோரிமேடு காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்தி, வங்கியின் தலைமை காசாளரான கணேசன், உதவி காசாளரான விஜயகுமார் ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.

இதுபற்றி காவல் ஆய்வாளர் வெங்கடாஜலபதி கூறுகையில், “வங்கியில் அடமானம் வைக்கப் படும் நகைகளை லாக்கரில் வைத்து பாதுகாப்பது வழக்கம். லாக்கரை திறக்க காசாளர்கள் செல்லும்போது வங்கி மேலாளர் மேகநாதன் உடன் செல்வார். அவர் விடுமுறை எடுத்தால் உதவி மேலாளர் பிரதீபாவிடம் வங்கி லாக்கர் சாவிகள் இருக்கும். பிரதீபா பொறுப்பில் இருக்கும்போது, லாக்கர் சாவிகளை காசாளரிடம் நம்பிக்கையின் அடிப்படையில் தந்துள்ளார். இதை பயன்படுத்திக் கொண்ட கணேசன், விஜயகுமார் இருவரும் வங்கியில் அடமானம் வைக்கப்படும் நகைகளை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து விடுவார் கள். பின்னர் அந்த நகைகளை வெளியில் எடுத்துச் சென்று வேறு இடங்களில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளனர். வங்கியில் அடமானம் வைத்தவர்கள் தங்க நகைகளை மீட்க வரும்போது குறிப்பிட்ட நாளில் வருமாறு கூறி வெளியில் இருக்கும் நகைகளை எடுத்து வந்து மீண்டும் லாக்கரில் வைத்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அண்மையில் ஆறுமுகம் நகைகளை அவசரமாக மீட்க வந்தபோது காசாளர்கள் சிக்கினர். லாக்கரில் இருந்த அடமான நகைகளில் 80 பைகளில் இருந்த 400 பவுன் நகைகளை வெளியில் அடமானம் வைத்திருந்தனர். அந்த நகைகள் அனைத்தையும் மீட்டுள் ளோம். இதன் மதிப்பு ரூ.1.19 கோடி.நகைகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு வங்கியில் ஒப்படைப்போம். பொதுமக்கள் நகைகள்அனைத்தும் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. அச்சப்பட தேவை யில்லை" என்று குறிப்பிட்டார்.

நகைகளை வெளியில் அடமானம் வைக்க காரணம் என்ன என்று கேட்டதற்கு, "கணேசன் தனது மகளுக்கு விமர்சையாக திருமணம் செய்துள்ளார். அதில் ஏற்பட்ட பணப் பிரச்சினையை சமாளிக்க கூட்டுறவு வங்கியில் அடமானம் வைக்கப்படும் நகை களை எடுத்து சென்று வெளியில் அடமானம் வைத்து தேவையை சமாளித்துள்ளார். நகையை மீட்கவருவோர் அவரது எண்ணுக்கு பேசும் போது உடனடியாக அந்ந கையை திருப்பி வந்து வைத்து சமாளித்துள்ளார். அவருக்கு உதவிகாசாளரும் உதவியுள்ளார். இருவர் மீதும் நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளோம்" என்று போலீஸார் குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x