Published : 22 Dec 2021 12:17 PM
Last Updated : 22 Dec 2021 12:17 PM
இடுவாய் அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியை வற்புறுத்தி கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு. வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் ஆகியோருக்கு தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
திருப்பூர் அருகே உள்ள இடுவாய் அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இடுவம்பாளையத்தை சேர்ந்த கீதா (45) என்பவர், கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இவர், மாணவ, மாணவிகளை தரக்குறைவாகவும், தகாத வார்த்தைகளால் பேசியதாகவும், ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகள் மூலம் கழிவறைகளை சுத்தம் செய்ததாகவும், முதன்மைக் கல்வி அலுவலர் ரமேஷூக்கு புகார் அளிக்கப்பட்டது. பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளிடம் நடத்திய விசாரணையில், புகார் உண்மையென தெரியவந்ததால், தலைமை ஆசிரியை கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதற்கிடையே இடுவாய் அரசு உயர்நிலைப் பள்ளி விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் ஆகியோருக்கு தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT