Published : 21 Dec 2021 09:55 AM
Last Updated : 21 Dec 2021 09:55 AM

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றினால் தடை விதிக்க அவசியமில்லை: ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தல்

புதுச்சேரியில் தனியார் ஓட்டல் ஒன்றில் கரோனா தடுப்பூசி போடாதவர்களை ஆய்வு செய்த சுகாதாரத் துறையினர், துணைநிலை ஆளுநர் தமிழிசை முன்னிலையில் அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

ஒமைக்ரான் வகை கரோனா வேகமாக பரவி வரும் சூழ லில், முழுமையாக தடுப்பூசி செலுத் தப்பட்ட மாநிலமாக புதுச்சேரியை மாற்றுவதற்காக சுகாதாரத்துறை தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி காந்தி வீதியில் வீடுகள், கடைகள்தோறும் சென்று தடுப்பூசி செலுத்தும் முகாமினை துணைநிலை ஆளுநர் தமிழிசை நேற்று ஆய்வு செய்தார்.

அதையடுத்து அவர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், “கரோனா தடுப்பூசி செலுத் தப்பட்டதற்கான ஆவணம் எப்போது வேண்டுமானாலும் கேட்கப்படலாம் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தோம். அதன்படி சுகாதாரத்துறையினரின் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஒமைக்ரான் உலகம் முழுவதும் பல நாடுகளில் லட்சக்கணக்கான பேரை பாதித்துக் கொண்டிருக்கிறது. சில நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போட்டிருக்கிறார்கள். நாம் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பாதிப்பை தவிர்த்து விடலாம்.

புதுச்சேரியில் முதல் தவணை தடுப்பூசி 8,14,000 பேர் செலுத்தியிருக்கிறார்கள். இரண்டாவது தடுப்பூசி 5,30,448 பேர் செலுத்துகிறார்கள். மொத்தம், 13,45,193 தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு காலக்கெடு விதிக்கவில்லை. ஓமைக்ரான் காலக்கெடு வைத்து வருகிறது. வெளிநாடுகளில் வேகமாக பரவத் தொடங்கிவிட்டது.

கரோனா விதிகளை பின்பற்றி புத்தாண்டு கொண்டாட்டங்கள், திருவிழாக்களை அனுமதிக்கலாம் என்று ஆலோசிக்கப்படுகிறது. வெளி ஊர்களிலிருந்து வருபவர் களுக்கும் சான்றிதழ் கேட்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மக்கள் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முறைகளை பின்பற்றினால் அரசு தடைவிதிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. அது மக்கள் கையில் தான் உள்ளது” என்று குறிப்பிட்டார். பின்னர் அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் உணவு விடுதியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஊழியர்களுக்கு தடுப்பூசி போடச் செய்தார்.

புதிதாக 10 பேருக்கு கரோனா

புதுவையில் நேற்று 831 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிதாக 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் தற்போது 129 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு எண்ணிக்கை 1,880 ஆக உள்ளது. இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x