Published : 20 Dec 2021 11:05 AM
Last Updated : 20 Dec 2021 11:05 AM
அரக்கோணம் அருகே துப்பாக்கிச்சூடு நடத்தி தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை யடித்துச்சென்றவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபா சத்யன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கன்னிகா புரம் பகுதியைச் சேர்ந்த புஷ்க ரன்(23). இவர், விவசாய நிலத்தில் வீடு கட்டி தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவு இவர் வளர்த்து வரும் நாய்கள் குரைக்கும் சத்தம் வெளியே கேட்டது.
உடனே, கண்விழித்த புஷ்கரன் படுக்கை அறையை விட்டு வெளியே வந்தார். அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டதால் கதவை திறந்தார். அங்கு பயங்கர ஆயுதங்களுடன் முகமூடி அணிந்தபடி 3 பேர் நின்றிருப்பதை கண்ட புஷ்கரன் கூச்சலிட்டார். உடனே, புஷ்கரனின் தாயார் சுதா (52), பெரியம்மா லதா(56), பாட்டி ரஞ்சித்மமாள்(76) ஆகியோர் வெளியே ஓடி வந்து கதவை மூடினர்.
இதைக்கண்ட முகமூடி கொள்ளையரில் ஒருவர் ஜன்னல் வழியாக நாட்டுத் துப்பாக்கியால் புஷ்கரனை நோக்கி சுட்டார். இதில், அவர் காயமடைந்து மயங்கி கீழே விழுந்தார். இதைக்கண்டதும் சுதா, லதா ஆகியோர் கூச்சலிட்டனர்.
உடனே, கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த முகமூடி கொள்ளையர்கள் துப்பாக்கி முனையில் பெண்களை மிரட்டி அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள், பீரோவில் இருந்த தங்க நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடினர்.
இதையடுத்து, மயக்கம் தெளிந்த புஷ்கரன் இது தொடர்பாக அரக் கோணம் நகர காவல் நிலையத் துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் காய மடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக் காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபாசத்யன் அரக்கோணம் அடுத்த கன்னிகாபுரம் பகுதிக்கு நேற்று காலை சென்றார். அங்கு வசித்து வரும் பொதுமக்களிடம் அவர் தீவிர விசாரணை நடத்தினார்.
வடமாநிலத்தவர்கள் நடமாட் டம் இப்பகுதியில் உள்ளதா? அடையாளம் தெரியாத நபர்கள் யாராவது இங்கு சுற்றித்திரிந் தார்களா ? புஷ்கரன் மற்றும் அவரது குடும்பம் குறித்து பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்தார்.
பின்னர் எஸ்.பி., டாக்டர் தீபாசத்யன், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அரக்கோணம் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில்துப்பாக்கிச் சூடு நடத்தி நடந்தகொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க3 தனிப்படைகள் அமைக்கப் பட்டுள்ளன.
தனிப்படை காவல் துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் வடமாநிலத் தவர்கள் ஈடுபட்டுள்ளார்களா ? என விசாரணை நடத்தி வருகிறோம்.
அதேபோல, கொள்ளையர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரள மாக பேசியுள்ளதால் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களா? இருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. தொடர் விசாரணையில் ஒரு துப்புக்கிடைத்துள்ளது, எனவே, விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT