Published : 14 Dec 2021 03:07 AM
Last Updated : 14 Dec 2021 03:07 AM
சென்னையில் இருந்து காசி, கயா,ஷீரடி, குஜராத் படேல் சிலை உள்ளிட்ட இடங்களுக்கு விமான சுற்றுலாவை ஐஆர்சிடிசி அறிவித் துள்ளது.
இதுதொடர்பாக இந்திய ரயில்வே உணவு, சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) நேற்று வெளியிட்ட அறிக்கை:
மக்களின் தேவைக்கேற்ப, பல்வேறு இடங்களுக்கு ரயில், விமானசுற்றுலாவுக்கு ஐஆர்சிடிசி ஏற்பாடுசெய்து வருகிறது. இந்நிலையில், தற்போது 3 விமான சுற்றுலாக்களுக்கு ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, சென்னையில் இருந்து வரும் ஜன.16-ம் தேதி புறப்பட்டு, குஜராத்தில் உள்ள படேல் சிலை, வெள்ளை பாலைவனம் எனப்படும் கட்ச் பாலைவனம் (ரன் ஆஃப் கட்ச்), அகமதாபாத் அக்ஷர்தாம் கோயில், சபர்மதிஆசிரமம், ராஜ்கோட் ஆகியவற்றைசுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 7 நாட்கள் கொண்டது.ஒருவருக்கு ரூ.31,500 கட்டணம்.
இதேபோல, ஜன.16-ம் தேதி சென்னையில் புறப்பட்டு, ஷீரடி - சனிசிங்னாபூர் - திரியம்பகேஷ்வர் ஜோதிர்லிங்க கோயிலை காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 3 நாட்கள் கொண்டது. ஒருவருக்கு ரூ.14,500 கட்டணம்.
சென்னையில் இருந்து ஜன.27-ம்தேதி புறப்பட்டு காசி, கயா, அலகாபாத் ஆகிய இடங்களை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது 6 நாட்கள் கொண்டது. ஒருவருக்கு ரூ.29,500 கட்டணம்.
விமானக் கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, நட்சத்திர விடுதி, உணவு உள்ளிட்டவை இதில் அடங்கும். சுற்றுலா குறித்து மேலும் தகவல்களுக்கு 8287931973, 8287931977 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT