Published : 04 Dec 2021 03:08 AM
Last Updated : 04 Dec 2021 03:08 AM
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் உள்ள வெங்கச்சேரி தடுப்பணை தொடர்ந்து ஒரு மாதமாக நிரம்பி வழிகிறது. செய்யாற்றின் குறுக்கே கூடுதல் தடுப்பணைகளை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓடும் முக்கிய ஆறுகள் பாலாறு மற்றும் செய்யாறு. இதில் பாலாற்றின் குறுக்கே 7 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. செய்யாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை மட்டும் வெங்கச்சேரி பகுதியில் கட்டப்பட்டுள்ளது. பழைய தடுப்பணை ஒன்று அனுமந்தண்டலம் பகுதியில் உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே வேறு தடுப்பணைகள் இல்லை.
இந்த ஆற்றில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் தண்ணீர் வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் பெய்யும் மழை, திருவண்ணாமலை மாவட்டத்தில் வெவ்வேறு சில பகுதிகளில் பெய்யும் மழையால் இந்த செய்யாற்றுக்கு தண்ணீர் வருகிறது.
தற்போது, வெங்கச்சேரி தடுப்பணை கடந்த ஒரு மாதமாக நிரம்பி வழிகிறது. இந்த ஆற்றின் குறுக்கே கூடுதல் தடுப்பணைகளை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். இந்த ஆற்றில் தடுப்பணை அமைப்பதன் மூலம் உத்திரமேரூர், வாலாஜாபாத் வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
தடுப்பணை அமைப்பதன் மூலம் உத்திரமேரூர், வாலாஜாபாத் வட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT