Published : 02 Dec 2021 03:07 AM
Last Updated : 02 Dec 2021 03:07 AM

ஹுண்டாயின் ‘தண்ணீர் சேமிப்பு சவால்’ திட்டம்

சென்னை

ஹுண்டாய் கார் வாடிக்கையாளர்கள் தங்கள் கார்களை தண்ணீரை பயன்படுத்தாமல் சுத்தம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அந்நிறுவனம் ‘தண்ணீர் சேமிப்பு சவால்’ என்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்தி வருகிறது.

இதுகுறித்து ஹுண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ஹுண்டாய் நிறுவனம் இயக்கத்துக்கு அப்பால் என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் தங்களின் கார்களை தண்ணீர் இல்லாமல் தூய்மைப்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் ‘தண்ணீர் சேமிப்பு சவால்’ என்ற திட்டத்தை கடந்த நவ.22-ல் தொடங்கி வரும் டிச.6-ம் தேதி வரை செயல்படுத்தி வருகிறது.

இதுகுறித்து ஹுண்டாய் விற்பனை, சந்தைப்படுத்துதல் மற்றும் சேவை பிரிவு இயக்குநர் தருண் கர்க் கூறும்போது, “நிலையான எதிர்காலத்துக்காக சுற்றுச்சூழலை பாதிக்காத நடைமுறைகள் மூலம் மனித குலத்தின் முன்னேற்றத்தை ஹுண்டாய் வலுப்படுத்துகிறது. இந்த ‘தண்ணீர் சேமிப்பு சவால்’ மூலம் ஹுண்டாய் சர்வீஸ் மையங்களில் டிரைவாஷ் முறையை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய நாங்கள் ஊக்குவிக்கிறோம். கடந்த 4 ஆண்டுகளில் 42 லட்சம் வாடிக்கையாளர்கள் இந்த முறையில் தங்கள் கார்களை சுத்தம் செய்துள்ளனர். இதன் மூலம் 50.4 கோடி லிட்டர் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. இதுபோல் காகிதம் இல்லா நடைமுறை, எல்இடி விளக்கு, சூரிய ஒளி பயன்பாடு, மழைநீர் சேமிப்பு போன்ற பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்களில் ஈடுபட்டு வருகிறோம்” என்றார்.

டிரைவாஷ் செய்ய வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 100 அதிர்ஷ்டசாலிகளுக்கு தலா ரூ.1000 மதிப்புள்ள அமெசான் வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன.

ஹுண்டாய் சர்வீஸ் மையங்களில் 360 டிகிரி மின்னணு மற்றும் கைதொடா சேவை, ஆன்லைனில் சர்வீஸுக்கு பதிவு செய்தல் உள்ளிட்டவற்றையும் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x