Published : 29 Nov 2021 03:07 AM
Last Updated : 29 Nov 2021 03:07 AM

செங்கை மாவட்டத்தில் மழையோ மழை: தீவுகளாய் மாறி தத்தளிக்கும் குடியிருப்புகள்

கோப்புப்படம்

செங்கல்பட்டு

தொடர் மழையால் செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக மாறி குடியிருப்புகள் தீவுகளாக காட்சிஅளிக்கின்றன. மழை தொடரும் என்பதால் நிலைமை என்னவாகும் என்ற அச்சம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளன. மாவட்டத்தில் உள்ள பாலாறு, அடையாறு உள்ளிட்ட ஆறுகளிலும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஏரிகளில் உபரிநீர் நேரடியாக ஆறுகளுக்கு செல்ல வழியின்றி, பல குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகள் தீவுகளாக காட்சி அளிக்கின்றன.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை முதல், மாவட்டத்தின் அனைத்து முக்கிய சாலைகளிலும் 3 அடி உயரத்துக்கு மழைநீர் சென்றதால், வாகனப் போக்குவரத்து கடுமையான பாதிப்புக்குள்ளானது.

குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் வடியாததால், மக்கள் கடும் அவதி, அச்சத்துக்கு உள்ளாகினர். பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, நவலூர், கேளம்பாக்கம், தாழம்பூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் தீவாக மாறியுள்ளன. பல இடங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் 200-க்கும்மேற்பட்ட பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து தீவுகளாக மாறிவிட்டதாகவும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மிதப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் அதிகாரிகளின் துணையுடன் வீட்டைவிட்டு வெளியேறி வருகிறார்கள். 2,000 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மழை இன்னும் தொடரும் என்பதால் தாக்குப் பிடிக்க முடியுமா என்ற கேள்வி, பொதுமக்கள் மட்டுமல்லாமல், அதிகாரிகள் மட்டத்திலும் எழுந்துள்ளது. அனைத்துக்கும் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் 200-க்கும்மேற்பட்ட பகுதிகள்வெள்ளம் சூழ்ந்துதீவுகளாக மாறிவிட்டதாகவும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மிதப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x