Published : 07 Nov 2021 03:07 AM
Last Updated : 07 Nov 2021 03:07 AM
சிவகங்கை ஆட்சியர் அலுவல கத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்த லுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீட்டு கூட்டத்துக்கு பாஜகவினர் வாயில் கருப்புத்துணி கட்டி வந்தனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் முன்னிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக் கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி வெளியிட்டார்.
பின்னர் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது பாஜக மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி, முன்னாள் மாவட்டத் தலைவர் சொக்கலிங்கம், நகரத் தலைவர் தனசேகரன் உள்ளிட்டோர் வாயில் கருப்புத்துணி கட்டி வந்தனர்.
ஆட்சியரிடம் மேப்பல் சக்தி கூறுகையில், கடந்த நவ.1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டின்போது, பாஜக நகரத் தலைவர் தனசேகரனிடம், "அனைத்து வார்டுகளிலும் நிற்கப் போகிறீர்களா?" என்று கேட்டீர்கள். இதன் மூலம் பாஜகவை அவமரியாதை செய்துள்ளீர்கள். இதற்கு தகுந்த விளக்கம் தர வேண்டும்’ என்றார்.
அதற்கு பதிலளித்த ஆட்சியர், ‘நான் எந்த கட்சியையும் அவ மரியாதை செய்யவில்லை’ என்றார். இதனை ஏற்க மறுத்த பாஜகவினர், கூட்டத்தைப் புறக் கணிப்பதாகக் கூறி வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து ஆட்சியர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யீட்டின்போது, அவர் (பாஜக நகரத் தலைவர் தனசேகரன்) தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் குறித்து கேட்டுக்கொண்டே இருந் தார். நான் உள்ளாட்சித் தேர்தல் குறித்த கூட்டம் வேறொரு நாளில் நடக்கும். அப்போது பேசிக் கொள் ளலாம் என்றேன். மற்றபடி அவரது கட்சி பற்றி எதுவும் பேசவில்லை இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT