Published : 31 Oct 2021 03:10 AM
Last Updated : 31 Oct 2021 03:10 AM

விக்கிரவாண்டி அருகே கண்டெடுத்த பச்சிளங் குழந்தையை ஒப்படைக்க திருநங்கை மறுப்பு: அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பிறகு குழந்தை மீட்பு

விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தில் திருநங்கை மது கண்டெடுத்த குழந்தை விபரம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் வினோத் விசாரணை செய்தார்.

விழுப்புரம்

விக்கிரவாண்டி அருகே திருநங்கை கண்டெ டுத்த பச்சிளங் குழந்தையை அதிகாரிகளிடம் ஒப்படைக்க மறுப்பு தெரிவித்தார். பேச்சு வார்த்தைக்கு பிறகு குழந்தை மீட்கப்பட்டது.

விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்தவர் மது (29). திருநங்கையான இவர் கடந்த 27-ம் தேதி 11 மணியளவில் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் செல்லும் போது அருகிலிருந்த தைலம் தோப்பிலிருந்து குழந்தைஅழும் சத்தம் கேட்டது. அங்கு சென்று லைட்அடித்து பார்த்த போது பிறந்த சில மணிநேரமேஆன பச்சிளம் ஆண் குழந்தை ரத்தக்கறையுடன் கிடந்தது. குழந்தையை கண்டெடுத்த மது, தன் வீட்டிற்கு கொண்டு வந்து பராமரித்து வந்தார்.

நேற்று கிராம சுகாதார செவிலியர் ராகினி யிடம் குழந்தை கிடைத்த விபரம் கூறி பிறந்த சான்று கேட்டுள்ளார்.

இதுபற்றி செவிலியர் ராகினி வட்டார மருத்துவ அலுவலருக்கு தகவல் தெரிவித்தார். இத்தகவலறிந்த வட்டார மருத்துவ அலுவலர் வினோத், சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன் ஆகியோர் தொரவி கிராமத்திற்கு சென்று குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும். குழந்தையை காப்பகத்தில் ஒப்ப டைக்க வேண்டும் என அறிவுறுத்தினர். ஆனால் திருநங்கை மது, குழந்தையை தான் வளர்க்க போவதாக கூறி மறுப்பு தெரிவித்தார்.

இதுபற்றி வட்டார மருத்துவ அலுவலர் வினோத் ஆட்சியர் மோகனுக்கு தகவல் தெரிவித்தார். இதன் பேரில் வட்டாட்சியர் தமிழ்செல்வி தொரவி கிராமத்திற்கு சென்று விசாரணை செய்தார். பின்னர் , சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். பச்சிளம் குழந்தையின் உரிமை கோரி பெற்றோர் வந்தால் மட்டுமே ஒப்படைப்பேன். அது வரை தானே வளர்ப்பதாக மது கூறினார். அதன் பின் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் குழந்தைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரபிரசாத், அலுவலர்கள் நெப்போலி யன், சதீஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் ஜெனிபர் ஆகியோர் குழந்தையை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனு மதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x