Published : 24 Oct 2021 12:14 PM
Last Updated : 24 Oct 2021 12:14 PM
6 மாத கால இடைவெளிக்குப் பின்னர் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மீண்டும் 100 அடியை எட்டியது.
தமிழகத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, கடந்த சில நாட்களாக, அதிகரித்துக் காணப்பட்டது.
அணைக்கு நேற்று வினாடிக்கு 39,634 கனஅடியாக இருந்தது. எனினும், நீர் வரத்து குறைந்து, இன்று காலை வினாடிக்கு 28,650 கனஅடியாக நீர் வரத்து இருந்தது.
படவிளக்கம்: நீர்மட்டம் 100 அடியை எட்டியதை அடுத்து மேட்டூர் அணையில் 16 கண் மதகு அருகே காவிரி அன்னைக்கு நன்றி தெரிவித்து வழிபாடு நடத்தப்பட்டது.
இதனிடையே, நேற்று 97.80 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 11 மணியளவில் 100 அடியாக உயர்ந்தது.
கடந்த மார்ச் 27- ம் தேதி 100 அடியை எட்டிய நிலையில், 6 மாத இடைவெளிக்குப் பின்னர் தற்பொழுது, மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. அணையின் நீர் இருப்பு 64.42 டி.எம். சி- யாக இருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT