Published : 02 Oct 2021 07:13 PM
Last Updated : 02 Oct 2021 07:13 PM
கரோனா தடுப்பூசி செலுத்தினால் தான் டாஸ்மாக்கில் மது வாங்க முடியும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டத்தில் நாளை (3ம் தேதி) அனைத்து பகுதிகளிலும் சுமார் 900க்கும் மேற்பட்ட இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு சுமார் 70 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.
மேலும்,மேற்குறிப்பிட்ட அனைத்து தடுப்பூசி மையங்களிலும்,போதியளவு தடுப்பூசிகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. முதல் தவணை மற்றும் 2ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள விரும்புவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டோர் அருகிலுள்ள கரோனா தடுப்பூசி மையத்திற்கு சென்று, தடுப்பூசி செலுத்திகொள்ளவும்.
மேலும்,விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க விரும்புவோர் தாங்கள் கரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை- குறுஞ்செய்தியினை விற்பனையாளரிடம் காண்பித்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும்.
மேலும்,அனைத்து டாஸ்மாக் விற்பனையாளர்களும் தங்களிடம் மதுபானம் பெற்றுசெல்லும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியுள்ளதை உறுதி செய்த பின்னரே அவர்களுக்கு மதுபானம் விற்பனை செய்யவேண்டும்.
தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்யாமல் தனி நபருக்கு மதுபானம் விற்கப்பட்டிருப்பது தெரிய வந்தால் சம்மந்தப்பட்ட கடை விற்பனையாளர் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்பிரிவின் கீழ் உரிய கடுமையான மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT