Published : 08 Sep 2021 03:17 AM
Last Updated : 08 Sep 2021 03:17 AM
சிவகங்கைக்கு சட்டக் கல்லூரி வாய்ப்பு கைநழுவிப்போனது. அந்த வாய்ப்பு காரைக்குடிக்கு கிடைத்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட அமர்வு நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், சார்பு நீதி மன்றம், மகளிர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், போக்சோ நீதிமன்றம், பிசிஆர் நீதிமன்றம், முதன்மைக் குற்றவியல் நடுவர் மன்றம் உட்பட 12 நீதிமன்றங்கள் உள்ளன.
10 ஆண்டுகளாக கோரிக்கை
இதனால் சட்டக் கல்லூரி மாண வர்கள் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக இருக்கும் என்பதால், சிவகங்கையில் சட்டக் கல்லூரி தொடங்க வேண்டுமென 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞர்கள், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். மேலும், சட்டப்பேர வைத் தேர்தல் பிரச்சாரத்தில் திருப்பத்தூரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘சிவகங்கையில் சட்டக் கல்லூரி, காரைக்குடி பகுதியில் வேளாண் கல்லூரி தொடங்கப்படும்,’ என தெரிவித் தார்.
அதன்படி சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கையின்போது காரைக்குடி செட்டிநாட்டில் வேளாண் கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் சட்டக் கல்லூரியும் காரைக்குடி பகுதிக்கே அறிவிக்கப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
இதற்குக் காரணம் சிவகங் கை தொகுதி அதிமுக வசமிருப் பதால் சட்டக் கல்லூரி வாய்ப்பு பறிபோனதாக புகார் எழுந்துள்ளது.
தற்போது சிவகங்கைக்கு அறிவிக்கப்பட்டுள்ள சிப்காட் தொழிற்பூங்காவும், ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் அறிவிக்கப் பட்டு, நிலம் கையகப்படுத்தப்பட் டதுதான்.
ஆனால், புதிதாக தொழிற் பூங்கா அமைவதுபோல் திமுக அரசு அறிவித்துள்ளது ஏமாற்ற மளிப்பதாக சிவகங்கை மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் காரைக்குடி பகுதிக்கு சட்டக் கல்லூரி அறி விக்கப்பட்டதை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் எம்பி, மாங்குடி எம்எல்ஏ மற்றும் காரைக்குடி தொழில் வணிகக்கழகத்தினர் வரவேற் றுள்ளனர். மேலும் அத்தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன் (அதிமுக) கூறுகையில், ‘சிவகங்கையில் சட்டக்கல்லூரி தொடங்க வேண் டும் என கடந்த செப்.3-ம் தேதி சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தேன்,’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT