Published : 29 Aug 2021 03:14 AM
Last Updated : 29 Aug 2021 03:14 AM
செங்கம் அருகே சின்னகல்தான் பாடி கிராமத்தில் இரும்பை உருக் கும் உலைக்களம் இருந்துள்ளது என தொல்லியல் ஆர்வலர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்தில் வரலாற்று சுவடுகள் நிறைந்து உள்ளன. அதன் தொடர்ச்சியாக, சின்னகல்தான்பாடி கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ‘இரும்பை உருக்கும் உலைக் களம்’ அமைத்த சுவடுகள் உள்ளது என தொல்லியல் ஆர்வலர் பிரேம் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “வரலாற்று சுவடுகளால் சூழ்ந்தது செங்கம் வட்டம். பெருங்கற்கால நினைவு சின்னங்கள், நடுகல், கல் வெட்டுகள் என பல சுவடுகள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், சின்னகல்தான்பாடி கிராமத்தில் இரும்பை உருக்கும் உலைக்களம் அமைத்துள்ளனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டிருக்கலாம். 5 ஏக்கர் விவசாய நிலத்தில், உலைக்களம் இருந்ததற்கான தடயங்கள் காணப் படுகிறது. அந்த பகுதியை கரிமேடு என கிராம மக்கள் அழைத்து வருகின்றனர். இரும்பை வார்க்க சுடுமண் குழாய், மண் குடுவைகள், சிட்டங்கள் போன்றவை சிதறி கிடக்கின்றன. விவசாய பணி செய்யும் போது, உடைந்த நிலையில் அம்மன் சிலை, உரல், அம்மிக்கல் போன்ற பழமையான பல்வேறு கல் தடயங்கள் கிடைத்துள்ளன. அதனை மரத்தடியில் விவசாயிகள் வைத் துள்ளனர்.
இந்த பகுதியில் தொல்லியல் துறையினர் ஆகழ்வாராய்ச்சி செய்தால், மேலும் பல வரலாற்று சுவடுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு கிடைக்கும் சுவடுகள் மூலம், தொன்மையான பகுதி என்பது தெரியவரும்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT