Published : 26 Aug 2021 03:15 AM
Last Updated : 26 Aug 2021 03:15 AM
கடந்த 100 நாட்களில் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சி பாராட்டுக்குரி யது என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியில் நேற்று அவர் அளித்த பேட்டி: தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் 100 நாளில் நிறைவேற்ற முடியாது. தேர்தல் வாக்குறுதிகள் 5 வருடத்துக்கா னது. இந்த 100 நாளில் முதல் வர் ஸ்டாலின் ஆட்சியும், அவரது நடவடிக்கைகளும் பாராட்டுக் குரியது. ரூ.6 லட்சம் கோடி மதிப் பிலான பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு விற்க முயற் சிக்கும் பாஜக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. தனியார் மயத்தை காங்கிரஸ் எதிர்க்க வில்லை, ஆனால் பொதுத் துறையை முற்றிலும் தனியாராக மாற்றக்கூடாது என்கிறோம்.
ஜெயலலிதாவின் மரணம் குறித்து அறிய அதிமுக தொண் டர்களும், பொதுமக்கள் ஆர்வ முடன் உள்ளனர். அதைத் தான் காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை கேள்வி எழுப்புகிறார். அதிமுக அதற்கு பதில்சொல்லவேண்டும். நாடாளுமன்றமும், சட்டப்பேரவை யும் விவாதம் செய்வதற்கான இடம்தான். அங்கு கேள்வி கேட்கக்கூடாது எனச்சொல்வது நியாயமல்ல என்றார்.
பேட்டியின்போது திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரைவேலன், மன்னார்குடி நகரத் தலைவர் கனகவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT