Published : 18 Aug 2021 03:14 AM
Last Updated : 18 Aug 2021 03:14 AM

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்பு கோயில் இடிப்பு: மௌன மட சுவாமிகள் எதிர்ப்பு

சிதம்பரம் சபாநாயகர் கோயில் தெருவில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீரனார் கோயிலை வருவாய்த்துறையினர் இடித்து அப்புறப்படுத்தினர்.

கடலூர்

சிதம்பரம் சபாநாயகர் தெருவில் சீர்காழி செல்லும் மெயின் ரோட்டில் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்பு சிறிய அளவிலான வீரனார் கோயில் இருந்தது. இந்த கோயிலை பொதுமக்கள் வழிபட்டு வந்தனர். இக்கோயில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்பில் இருந்ததால் வருவாய்த் துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் நேற்று இடித்து, அகற்றினர். இது குறித்து தகவலறிந்த இந்து முன்னணியினர் அப்பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தக் கோயிலுக்கு அருகில் உள்ள மௌன மடத்தைச் சேர்ந்த மௌன சுந்தரமூர்த்தி சுவாமிகள் இடித்த கோயில் இருந்த இடம் மடத்துக்கு சொந்தமானது என்று கூறி, கோயிலை இடித்து அகற்றியதை கண்டித்து கோயில் இடத்த இடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்த சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், வட்டாட்சியர் ஆனந்த் மற்றும் போலீஸார் சம்பவ இடத் துக்கு சென்று சுந்தரமூர்த்தி சுவாமியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர், மடத்திற்கு சொந்தமான இடத்தில் இந்த கோயில் இருந்தது; அதற்கு உரிய ஆவணங்கள் இருக்கின்றன; ஆவணங்களை அதிகாரி களிடம் காண்பிக்கிறேன் என்று கூறினார். இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் போலீஸார் அங்கிருந்து சென்றனர்.

பின்னர் பொதுமக்கள் இடித்த இடத்தில் வீரனார் சுவாமியை வைத்து வழிபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x