Published : 17 Aug 2021 03:16 AM
Last Updated : 17 Aug 2021 03:16 AM
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் 2006-ல் முதல் பெண் ஓதுவா ராக நியமிக்கப்பட்டு, பல்வேறு காரணங்களால் பணியில் இருந்து விலகிய பெண், தனக்கு மீண்டும் ஓதுவார் பணி வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளார்.
திருச்சி செம்பட்டு அங்காளம் மன் கோயில் தெருவைச் சேர்ந்த வர் அங்கயற்கண்ணி(39). இவர், கடந்த திமுக ஆட்சியின்போது, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ், 2006-ம் ஆண்டில் திருச்சி உறையூர் பஞ்சவர்ணசாமி கோயிலில் ஓதுவாராக நியமிக் கப்பட்டார். பின்னர் அவர் பல்வேறு காரணங்களால் பணியை தொடர முடியவில்லை. இந்நிலையில், அவர் தற்போது தனக்கு மீண்டும் ஓதுவார் பணி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: 2006-ல் திமுக ஆட்சிக் காலத்தில் எனக்கு ஓதுவார் பணி கிடைத்தது. 2010-ல் நாமக்கல்லைச் சேர்ந்த செந்தில் நாதன் என்பருடன் திருமணம் ஆன நிலையில் ரூ.1,500 மாத ஊதி யத்தில் குடும்பத்தை நடத்துவதில் சிரமமாக இருந்தது. இருப்பினும், 2013 வரை பணியில் இருந்தேன். பின்னர், பல்வேறு காரணங்களால் பணியைத் தொடர முடியவில்லை.
அதன்பின், 2016 முதல் மீண்டும் பணி கேட்டு அரசிடம் விண்ணப்பித்து வந்தேன்.
இதையடுத்து, 2019-ல் உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோயிலில் அன்னதான உதவியாளர் பணி கிடைத்தது. கடந்த ஆண்டு முதல் கரோனா பரவல் காரணமாக பணிக்குச் செல்லவில்லை.
தேவாரம், திருவாசகம் பாடும் பணியில் கிடைக்கும் மனநிறைவே பெரிதாக கருதுகிறேன். எனவே, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தில் தமிழக அரசுக்கு எனக்கு மீண்டும் ஓதுவார் பணி வழங்கி உதவ வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT