Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM
சிவகங்கை நகராட்சி இந்த ஆண்டும் தரம் உயர்த்தப்படாது எனத் தெரிய வந்துள்ளது.
1964-ம் ஆண்டே சிவகங்கை நகராட்சியாகத் தரம் உயர்த்தப் பட்டது. 1985-ல் சிவகங்கை மாவட்டத் தலைநகராக மாறியது. மேலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு முதல்நிலை நகராட்சியானது.
ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, சிவகங்கை நகராட்சியில் வரி வருவாயை அதிகரிக்க, நகரின் விரிவாக்கப் பகுதிகளை இணைக் குமாறு நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார்.
அதன்படி, சிவகங்கையுடன் காஞ்சிரங்கால், வாணியங்குடி ஊராட்சிகள் முழுவதும், கொட்ட குடி கீழ்பாத்தி ஊராட்சியில் கொட்டகுடி, சூரக்குளம் - புதுக்கோட்டை ஊராட்சியில் ராகிணிப்பட்டி, பையூர், இடைய மேலூர் ஊராட்சியில் காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளை இணைத்து 33 வார்டுகளாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப் பட்டது.
மேலும் 7 கி.மீ. சுற்றளவுள்ள சிவகங்கை நகராட்சியில் 60 ஆயி ரம் பேர் உள்ளனர். நகராட்சி ஆண்டு வருவாய் ரூ.5 கோடிக்கும் குறைவாகவே உள்ளது. விரி வாக்கப் பகுதிகளை இணைத்தால் மக்கள் தொகை ஒரு லட்சத்தை எட்டும். மேலும் வருவாயும் ரூ.8 கோடியாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டது.
விரிவாக்கப் பகுதிகளை இணைக்க 2014-ல் அப்போதைய நகராட்சித் தலைவர் அர்ச்சுனன் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அறிக்கை அனுப்பினார். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் வருவாய் பற்றாக் குறையால் நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. மேலும் இடப் பற்றாக்குறையால் புதிய பேருந்து நிலையம் போன்ற திட்டப் பணிகள் தொடங்குவதிலும் சிக்கல் உள்ளது.
சிவகங்கையை தேர்வு நிலை நகராட்சியாக்க வருவாய் ரூ.6 கோடிக்கு அதிகமாக இருக்க வேண்டும். சிறப்பு நிலையாக்க ரூ.10 கோடிக்கு மேல் வருவாய் இருக்க வேண்டும்.
சிவகங்கை சிறப்புநிலை நகராட்சியாக இல்லாததால் 8-வது ஊதியக்குழு மாற்றத்தில் கிரேடு -2-ல் இருந்து சிவகங்கை நீக்கப்பட் டது. இதனால் அரசு ஊழியர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,200 வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. 2019-ல் ராமநாதபுரம் முதல்நிலை நகராட்சியில் இருந்து தேர்வுநிலை பெறாமலேயே சிறப்பு நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டது.
அதேபோல், சிவகங்கையையும் சிறப்புநிலையாக தரம் உயர்த்த மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தரம் உயர்த்துவது தொடர்பாக பிற நகராட்சிகளில் இருந்து அதற்கான விவரங்களை அரசு கோரி வருகிறது. ஆனால் சிவகங்கை நகராட்சியிடம், இதுவரை எந்த விவரமும் கோரப்படவில்லை. இதனால் இந்தாண்டும் சிவகங்கை தரம் உயர வாய்ப்பில்லை எனத் தெரியவந்துள்ளது. அரசியல் அழுத்தம் இல்லாததாலேயே சிவ கங்கை தொடர்ந்து புறக்கணிக் கப்பட்டு வருவதாக மக்கள் ஆதங் கம் தெரிவித்தனர்.
இதுகுறித்து பி.ஆர்.செந்தில் நாதன் எம்எல்ஏ கூறுகையில், ‘சிவகங்கையை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து பேச அனுமதி கேட்டுள் ளேன். இது சம்பந்தமாக கண்டிப்பாக சட்டப்பேரவை கூட் டத் தொடரில் பேசுவேன்,’ என்றார்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘தரம் உயர்த்துவது குறித்து எந்தவொரு கருத்துருவையும் அரசு இதுவரை கேட்கவில்லை.’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT