Published : 26 Jul 2021 03:13 AM 
 Last Updated : 26 Jul 2021 03:13 AM
எலவனாசூர்கோட்டை (பிடாகம்) ஊராட்சி யில் ஏரிகளில் குப்பைகளைக் கொட்டியும், கட்டிடங்கள் கட்டியும் நீர் நிலைகளை அழிக்கும் செயலில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
உளுந்தூர்பேட்டை வட்டம் பிடாகம் எனும் எலவனாசூர்கோட்டை ஊராட்சி உளுந்தூர்பேட்டை-சேலம் செல்லும் சாலை மார்க்கத்தில் உள்ளது. இந்த ஊராட்சி நிர்வாகத்தின் பராமரிப்பில் 7 ஏரிகளும், பொதுப்பணித்துறையின் பராமரிப்பில் 1 ஏரியும் உள்ளது.
இதில் எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலையில் உள்ள சின்னான் ஏரி மற்றும்வண்ணான் ஏரி தற்போது ஆக்கிரமிப் புக்குள்ளாகி வருகிறது.
சின்னான் ஏரியில் ஊராட்சி நிர்வா கமே குப்பைகளையும், இறைச்சிக் கழிவு களையும் கொட்டி ஏரியின் பரப்பளவை குறைத்துக் கொண்டே வருகிறது. அதேநேரத்தில் ஏரியின் தெற்கு பகுதியில் ஒரு கட்சியைச் சேர்ந்தவர் கட்டிடம் கட்டிஅதை டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வாடகைக்கு விட்டுள்ளார். மேலும் சிலர் விவசாய நிலமாக அனுபவித்து வருகின்றனர்.
அதேபோன்று வண்ணான் ஏரியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குப்பைகளை கொட்டி உரக் கிடங்கு கட்டிடத்தை அமைத்துள்ளனர். உரக்கிடங்கு அமைக்கப்பட்டதால் அவ்வூரைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், ஏரிக்குள் வணிக வளாகங்களை கட்டி ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் ஏரிக்கு செல்லவேண்டிய தண்ணீர், ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது.
சின்னான் ஏரியில் கொட்டப்படும் குப்பை மற்றும் இறைச்சிக் கழிவுகளால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக குடியிருப்பு வாசிகள் கவலை தெரிவிக் கின்றனர்.
நீர் நிலைகளை பாதுகாக்கவேண்டும் எனவும், புதிய நீர் நிலைகளை உருவாக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், இருக்கின்ற நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாவது குறித்து, பிடாகம் ஊராட்சி செயலர் முகமதுஅலி ஜின்னாவிடம் கேட்டபோது, "குப்பைகளை கொட்ட வேறு இடம் இல்லாததால் அங்கு கொட்டவேண்டிய சூழல் இருக்கிறது. விரைவில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு பொது இடத்தை தயார் செய்து அவ்விடத்தில் குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
								
WRITE A COMMENT