Published : 12 Jul 2021 03:14 AM
Last Updated : 12 Jul 2021 03:14 AM
சிவகங்கை கிராபைட் ஆலையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பேவர்பிளாக் கற்கள், இயந்திரங் கள் வீணாகி வருகின்றன.
சிவகங்கை கிராபைட் தொழிற்சாலை 1994-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கிராபைட் மூலம் பென்சில், உராய்வுத் தடுப்பான்கள், தங்கம், இரும்பு போன்ற உலோகங்களை உருக்கும் உலை (குருசுபுல்), ராக்கெட், விமானத்தில் அதிக வெப்பத்தைத் தாங்கும் பொருட் களைத் தயாரிக்க முடியும்.
இங்கு கிடைக்கும் கிராபைட் கற்கள் ஆந்திரா உட்பட வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. கிராபைட் தொடர்பான உப தொழில்கள் இல்லாததால் வேலைவாய்ப்பும், வருமானமும் பெரிதாக இல்லை.
இதையடுத்து ஆலையின் வருமானம் மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பேவர் பிளாக் கற்கள் தயாரிக்கும் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இதற்காக கோவையில் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் வாங்கப்பட்டன.
மேலும் ஆலை அதிகாரிகள் மேற்பார்வையில் அவுட்சோர்சிங் பணியாளர்கள் மூலம் பேவர் பிளாக் கற்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஆனால், பேவர்பிளாக் கற்களை உள்ளாட்சி அமைப்புகள், அரசு ஒப்பந்ததாரர்கள் வாங்க முன்வரவில்லை. மேலும் அதிகாரிகளும் ஒத்துழைக்கவில்லை. இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான கற்கள் தேங்கின.
இதையடுத்து பேவர்பிளாக் தயாரிக்கும் பிரிவை ஆலை நிர்வாகம் மூடியது. மேலும் தேக்கமடைந்த கற்களும், இயந்திரங்களும் வீணாகி வருகின்றன.
இதுகுறித்து பணியாளர்கள் கூறுகையில், கிராபைட் ஆலையில் இருந்து கிடைக்கும் கழிவு மண்ணை பயன்படுத்தி பேவர்பிளாக் கற்கள் தயாரிக்கப்பட்டன. ஆனால் எதிர் பார்த்தபடி உள்ளாட்சி அமைப்புகள் பேவர்பிளாக் கற்களை வாங்க மறுத்துவிட்டன. இதனால் கற் களை விற்க முடியாமல் போன தால் தேக்கமடைந்தன. சமீபத்தில் சில ஆயிரம் கற்கள் மட்டும் விற்பனையாகின. ஆனால் மற்ற கற்கள் சேதமடைந்து வீணாகி வருகின்றன. அதேபோல் இயந் திரங்களும் துருப்பிடித்து வீணாகி வருகின்றன, என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT