Published : 07 Jul 2021 03:13 AM
Last Updated : 07 Jul 2021 03:13 AM
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஆட்சியின் போது, செயல்படுத்தப்பட்ட பசுமை வீடுகள், இந் திராகாந்தி நினைவு குடியிருப்பு, கிராப்புற சாலை அமைத்தல், தெருவிளக்கு, குடிநீர் குழாய் அமைத்தல், வடிகால் வசதி மேற்கொள்ளுதல், சுடுகாட்டுப் பாதைஅமைத்தல், வயல்வெளி சாலை கள், சமுதாயக் கூடம் கட்டுதல் உள்ளிட்டப் பணிகளை தொடரும் வகையில் கடந்த 2020-21-ம் நிதிஆண்டில் சுமார் ரூ.70 கோடி அளவுக்கு வட்டாரம் வாரியாக திட்டப் பணிகள் தயாரிக்கப்பட்டு, ஒப்பந்தப் பணிகள் கோரப்பட்டு, ஒப்பந்ததாரர்களும் நியமிக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன.
‘மீண்டும் ஆட்சிக்கு வரு வோம்’ என்ற நம்பிக்கையில் பொதுத்தேர்தலுக்கு முன்னரே ஒப்பந்த தாரர்களை நியமித்து பணிகளை தொடங்கி விட்டனர்.
இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், பணிகளை தொடர்வதில் ஒப்பந்ததாரர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது. புதிதாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கட்சியினர், பணிகள் தாமதமாக நடைபெறுவதாகவும், பல இடங்களில் கடந்த 10 ஆண்டுகளாகபணிகளே நடைபெறாமல் உள்ள தாகவும் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் பணிகளை விரைந்து முடிப்பதோடு, முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இதையறிந்த எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களை முற்றுகையிட்டு, ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்ட நிலையில் அவர்களை பணி செய்ய விடவேண்டும் என்று கூறி வருகின்றனர்.
அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களுடன் சென்ற அதிமுக மாவட்டச் செயலாளர் குமரகுரு வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டுள்ளார். இதையடுத்து நேற்று உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஜே.மணிக்கண்ணன் தனது ஆதரவாளர்களுடன் உளுந்தூர் பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து முறையாக ஒப்பந்தம் விட்டு தான், பணிகளை தொடர வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் எம்எல்ஏ குமரகுருவிடம் கேட்ட போது, “அதிமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை முடிக்க அவகாசம் கொடுக்க வேண்டும். பணிகளை மேற்கொள்ள இடையூறு செய்யவேண்டாம் என வட்டார வளர்ச்சிஅலுவலரிடம் எடுத்துக் கூறியிருக் கிறோம்” என்றார்.
இதுபற்றி தற்போதைய உளுந் தூர்பேட்டை எம்எல்ஏ ஏ.ஜெ.மணிக்கண்ணனிடம் கேட்டபோது, “கடந்த 10 ஆண்டுகளாக தொகுதி யில் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் நடைபெற்றதாக கணக்கு மட்டுமே உள்ளதே தவிர, அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முறைகேடில்லாமல் பணிகள் நடைபெற வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலரிடத்தில் வலியுறுத்தியிருக்கிறோம்” என் றார்.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பேசுகை யில், “அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட பணிகளில், தொடங்கப்படாத பணிகளை நாங்கள் செய்வோம்; தொடங்கியப் பணிகளை அதிமுகவினர் செய்யலாம் என்று திமுகவினர் கூறுகின்றனர்.
ஆனால் அதிமுகவினரோ அதி முக ஆட்சிக் காலத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட அனைத்துப் பணிகளையும், முறையாக ஒப்பந்தம் எடுத்ததன் பேரில் நாங்கள் தான் செய்வோம், அதற்கு அவகாசம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
இரு தரப்பினரின் கோரிக்கை களும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட் டுள்ளது. ஓரிரு வாரங்களில் சுமூக மாகி விடும் என்று நம்புகிறோம்” என்று தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT