Published : 06 Jul 2021 03:13 AM
Last Updated : 06 Jul 2021 03:13 AM
சிவகங்கை அருகே மேலச்சாலூர் விவசாயிகள், ஆண்டு முழுவதும் சுழற்சி முறையில் காய்கறி பயிர் களை சாகுபடி செய்து விவசாயம் வெற்றிகரமான தொழில் என்ப தற்கு உதாரணமாகத் திகழ் கின்றனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தொடர் வறட்சி, விளைப்பொருட் களுக்கு போதிய விலை கிடைக் காதது போன்ற காரணங்களால் பலர் விவசாயத்தை கைவிட்டு வேறு தொழிலுக்கு மாறி வருகின் றனர். இதனால் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் தரிசாக உள்ளன.
ஆனால் சிவகங்கை அருகே மேலச்சாலூர் கிராம மக்கள் வறட்சி காலத்திலும் விவசாயத்தைக் கைவிடாமல் மேற்கொண்டு வரு கின்றனர்.
இக்கிராமத்தில் 350 குடும்பங்கள் வசிக்கின்றன. அனைவரும் விவசாயிகள். ஒவ்வொருவருக்கும் 10 சென்ட் முதல் ஒரு ஏக்கர் வரை நிலம் உள்ளது. சிலர் பம்புசெட் மூலம் விவசாயம் செய்கின்றனர். சிறிய குட்டையில் தண்ணீர் கிடந்தாலும் அதை பயன்படுத்தி காய்கறி சாகுபடி செய்கின்றனர்.
பொதுவாக ஒரு குறிப்பிட்ட பயிரை மட்டும் அதிக அளவில் சாகுபடி செய்தால் விலை வீழ்ச்சி, திடீர் பூச்சித் தாக்குதலால் விளைச்சல் குறைவு போன்றவை ஏற்படும்போது சம்பந்தப்பட்ட விவசாயி கடும் நஷ்டத்தைச் சந்திக்க நேர்கிறது.
இதைத் தவிர்க்க மேலச்சாலூர் விவசாயிகள் சுழற்சி முறை சாகுபடியை வெற்றிகரமாக கையாண்டு வருகின்றனர். அதாவது ஒவ்வொரு விவசாயியும் தனது நிலத்தை 5 அல்லது 6 பாகங்களாக பிரித்து வெவ்வேறு பயிர்களை சாகுபடி செய்கின்றனர். ஒவ்வொரு பயிரையும் குறைந்தது 5 முதல் 10 சென்ட் இடத்தில் மட்டுமே சாகுபடி செய்கின்றனர். இதன் மூலம் ஆண்டு முழுவதும் காய்கறி விளைச்சல் உள்ளது.
இக்கிராம மக்கள் சிவகங்கை நகரம் மற்றும் அதனைச் சுற்றியு ள்ள 100 கிராம மக்களின் காய்கறி தேவைகளை பூர்த்தி செய்கின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் கூறியதாவது: மலைப்பிரதேச காய்கறிகளை தவிர்த்து, கருணைக்கிழங்கு, வெங்காயம், கத்தரி, வெண்டை, கொத்தவரை, அவரை, புடலை உள்ளிட்ட அனைத்து வகை காய்கறி பயிர்களையும் சாகுபடி செய்கிறோம்.
குறைந்த தண்ணீர் இருந்தாலும் அதை பயன்படுத்தி ஏதாவதொரு காய்கறியை பயிரிடுவோம். நிலத்தை எப் போதும் தரிசாக விடமாட்டோம். நீர்நிலைகள், கிணறுகள் வறண்டு விட்டாலும் தண்ணீரை விலைக்கு வாங்கி வந்து பயிர்களை காப்பாற்றிவிடுவோம். இங்கு விளையும் காய்கறிகளை சுற்றி யுள்ள சிவகங்கை, வாணியங் குடி, காஞ்சிரங்கால், சோழபுரம், இடையமேலூர் உள்ளிட்ட பகுதி களில் விற்பனை செய்கிறோம்.
இக்கிராமத்தைச் சேர்ந்த இளைய தலைமுறையினரையும் விவசாயப் பணி மேற்கொள்ள ஊக்குவித்து வருகிறோம். அவர் களும் ஆர்வமுடன் பயிர் சாகு படியில் பங்கெடுத்து வருகின் றனர். இளைஞர்கள் சிலர் வெளி நாட்டில் உள்ளனர். அவர்கள் விடு முறைக்கு ஊருக்கு வந்தால் உடனே குடும்பத்தினருடன் சேர்ந்து விவசாயப் பணிகளை மேற்கொள்வார்கள் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT