Published : 27 Jun 2021 03:15 AM
Last Updated : 27 Jun 2021 03:15 AM

இப்படியும் மின்தடை ஏற்படலாம்: மின் ஊழியர்கள் விளக்கம்

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி பகுதியில் மின்கம்பம் ஒன்றில் இறந்து கிடக்கும் மரநாய்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த ஏலாக்குறிச்சி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து மின் ஊழியர்கள் அப்பகுதிகளில் மின் கம்பிகளில் உரசும் மரக்கிளை களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஏலாக்குறிச்சி- தூத்தூர் சாலையில் நேற்று மின்விநியோகம் பாதிக்கப்பட் டிருந்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் மின்கம்பிகள் செல்லும் பாதைகளை ஆய்வு செய்தபோது, அரசன் ஏரிப்பகுதியில் உள்ள ஒரு மின்கம்பத்தின் மேல் மரநாய் ஒன்று இறந்து கிடப்பதும், அதனால் மின்தடை ஏற்பட்டிருப்பதும் தெரி யவந்தது.

இதையடுத்து, அதை மின் வாரிய ஊழியர்கள் அப்புறப்ப டுத்தி மின் விநியோகத்தை சீரமைத்தனர். அப்போது, மரநாய் மின்கம்பத்தில் ஏறி விளையாடும் போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக் கலாம். இதுபோன்ற காரணங் களாலும் மின்தடை ஏற்பட வாய்ப்பு உள்ளது என மின் வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x