Published : 14 Jun 2014 09:01 AM
Last Updated : 14 Jun 2014 09:01 AM

அதிமுக கிளைச் செயலர் மகனை போலீஸார் கொன்றதாக வழக்கு

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே அதிமுக கிளைச் செயலரின் மகனை அடித்து கொன்றதாக போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வத்திராயிருப்பு அருகே இரு பிரிவினரிடையே நடந்த தகராறின்போது ராமசாமியாபுரம் அதிமுக கிளைச் செயலர் ராமச்சந்திரன் தகராறு செய்த தங்கபாண்டியன், சந்திரபோஸ் ஆகியோரை கண்டித்துள்ளார். இதைத் தொடர்ந்து ராமச் சந்திரன் தரப்பினருக்கும் சந்திரபோஸ் தரப்பின ருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

தகவலறிந்து கூமாப்பட்டி உதவி ஆய்வாளர் பஞ்சபாண்டி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று, இரு பிரிவினரையும் தாக்கியதாகவும், அதில் ராமச்சந்திரன் மகன் பாலமுருகன் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

போலீஸார் தாக்கியதால்தான் பாலமுருகன் இறந்ததாகக் கூறி அவரின் உறவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் தாக்கியதில் தனது மகன் இறந்ததாக ராமச்சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் போலீஸார் மீது கூமாப்பட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ராமச்சந்திரன் கொடுத்த மற்றொரு புகாரின் பேரில் தங்கபாண்டியன், சந்திரபோஸ் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து, சந்திரபோஸை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

காவலர் ரவி கொடுத்த புகாரின்பேரில் ராமச்சந்திரன் மற்றும் 20 பேர் மீதும் உதவி ஆய்வாளர் ராஜா கொடுத்த புகாரின்பேரில் ராமச்சந்திரன் மற்றும் 30 பேர் மீதும் கூமாப்பட்டி போலீஸார், இந்த சம்பவம் தொடர்பாக தனித் தனியாக மொத்தம் 4 வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x