Published : 04 Jun 2014 10:45 AM
Last Updated : 04 Jun 2014 10:45 AM

விஏஓ காலி பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வருகிற 14.06.2014-ல் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு, 2342 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை நடத்தவுள்ளது. இதுதொடர்பாக தேர்வுக் கட்டுப்பாடு அலுவலர் வெ.ஷோபனா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இத்தேர்வுக்கென 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை (Registration ID) உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

நுழைவுச்சீட்டு கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பதை நிராகரிப்புப் பட்டியலில் (Rejection List) கண்டறியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

`நிராகரிப்புப் பட்டியலில் இடம்பெறாத, சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும் நுழைவுச்சீட்டு கிடைக்கப்பெறாத, தகுதியான விண்ணப்பதாரர்கள், தாங்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச்சீட்டின் (Challan) நகலுடன் விண்ணப்பதாரரின் பெயர்,கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான விண்ணப்ப பதிவு எண் (Registration ID),விண்ணப்ப / தேர்வுக் கட்டணத்தை செலுத்திய அஞ்சலகம் / இந்தியன் வங்கி/வங்கிக்கிளை / அஞ்சலகத்தின் முகவரி ஆகிய விவரங்களை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.com-க்கு, 09.06.2014 தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி அல்லது contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x