Published : 17 Jun 2021 03:14 AM
Last Updated : 17 Jun 2021 03:14 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு 27 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்: ஓரிரு நாளில் தீர்ந்து விட வாய்ப்பு

வேலூர்/திருப்பத்தூர்/ராணிப்பேட்டை

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் துக்கு 27 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்தன.

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.

கரோனாவில் இருந்து பொது மக்களை பாதுகாக்க மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் முகாம் தீவிரமாக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தடுப்பூசி மீது இருந்த அச்சம் படிப்படியாக குறைந்து தற்போது தடுப்பூசியை போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 45 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கும், 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டோர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன.

தமிழகத்துக்கு கரோனா தடுப்பூசி போதுமான அளவுக்கு விநியோகம் செய்யப்படாததால் அவ்வப்போது தடுப்பூசி தட்டுப்பாடுகள் ஏற்படுகின்றன. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை பொறுத்த வரை திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களை காட்டிலும் வேலூர் மாவட்டத்தில் அதிக அளவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2 லட்சத்து 49 ஆயிரத்து 921 பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப் பட்டுள்ளன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கரோனா தடுப்பூசிகள் இருப்பு இல்லாத தால் கடந்த 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. கையிருப்பு இருந்த தடுப்பூசிகளை கொண்டு அரசு மருத்துவமனைகளில் முன்னுரிமை அடிப்படையில் சொற்ப அளவிலேயே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் நேற்று முன்தினம் வந்தடைந்தன. அந்த தடுப்பூசிகள் மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டன. அதன்படி, வேலூர் மாவட்டத்துக்கு 10 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று முன்தினம் இரவு வந்தடைந்தன.

இதைத்தொடர்ந்து, அனைத்து முகாம்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் ஆர்வமுடன் முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசியை செலுத்திக்கொண் டனர். முதல் தவணை போட்டுக்கொண்டு அதற்கான காலக்கெடு முடிவடைந்தவர்களும் நேற்று முதல் 2-வது தவணை தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.

திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 7,500 கோவிஷீல்டு தடுப்பூசி களும், 2 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகளும் நேற்று முன்தினம் இரவு வந்து சேர்ந்தன. இதைத்தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த முகாம்கள் நேற்று முதல் செயல்பட தொடங்கியுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு 9,500 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 2,500 கோவாக்சின் தடுப்பூசிகளும் நேற்று முன்தினம் வந்தடைந்தன. 36 இடங்களில் நடைபெறும் மருத்துவ முகாம்களில் கரோனா தடுப்பூசிகள் நேற்று முதல் செலுத்தப்பட்டு வருகின்றன.

ஒருகிணைந்த வேலூர் மாவட்டத்துக்கு தற்போது வந்துள்ள 27 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஓரிரு நாளில் தீர்ந்து விடும் என்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு தடுப்பூசியை போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருவதாக மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x