Last Updated : 08 Jun, 2021 03:13 AM

 

Published : 08 Jun 2021 03:13 AM
Last Updated : 08 Jun 2021 03:13 AM

அரசாணை பிறப்பித்து 4 ஆண்டுகளாகியும் பணி நிரந்தரம் செய்யாததால் தவிக்கும் ஊரக வளர்ச்சி கணினி உதவியாளர்கள்

சிவகங்கை

நான்கு ஆண்டுகளாகப் பணி நிரந்தர அரசாணை கிடப்பில் போடப்பட்ட நிலையில், கரோனா ஊரடங்கு நேரத்திலும் ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் கணினி உதவியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

தேசிய வேலையுறுதித் திட்டம் 2005-ம் ஆண்டு செயல்படுத்தப் பட்டது. இப்பணிகளைக் கண்காணிக்க ஓவர்சீயரும், இணையத்தில் பதிவேற்றம் செய்ய கணினி உதவியாளர்களும் 2007-ம் ஆண்டு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஒன்றிய அலுவலகங்களில் நியமிக்கப்பட்டனர். இதில் 2008-ம் ஆண்டு ஓவர்சீயர்கள் மட்டும் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர்.

ஆனால், கணினி உதவி யாளர்கள் தொடர்ந்து ஒப்பந்தப் பணியாளர்களாகவே உள்ளனர். தற்பாது 1,843 பேர் பணிபுரிகின்றனர். மேலும் அவர்கள் தொடர் போராட்டம் நடத்தியதை அடுத்து 2017-ம் ஆண்டு பணி நிரந்தரம் செய்ய அரசாணை வெளியானது. ஆனால், அந்த அரசாணையை 4 ஆண்டுகளாக அமல்படுத்தவில்லை. தற்போது கரோனா ஊரடங்கு நேரத்திலும் தேசிய வேலையுறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதால், கணினி உதவியாளர்களும் 100 சதவீதம் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த சமயத்திலாவது தங் களைப் பணி நிரந்தரம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனிடம் மனு கொடுத்தனர்.

இது குறித்து கணினி உதவியாளர்கள் கூறுகையில், எங்களுடன் பணியில் சேர்ந்த ஓவர்சீயர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, பலர் உதவிப் பொறியாளர்களாகவும் பதவி உயர்வு பெற்று அதன் பலனை அனுபவிக்கின்றனர். ஆனால், நாங்கள் மட்டும் 15 ஆண்டுகளாக தொகுப்பூதியத்திலேயே பணிபுரிகிறோம். எங்கள் பணி கரோனா ஊரடங்கிலும் தொடர்கிறது. பணி நிரந்தர அரசாணையை உடனே அமல்படுத்த வேண்டும், என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x