Published : 02 Jun 2021 03:14 AM
Last Updated : 02 Jun 2021 03:14 AM

சிவகங்கை அரசு மருத்துவமனையில் திறந்து 3 நாட்களாகியும் செயல்படாத உதவி மையம்

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆளே இல்லாத கரோனா தகவல் உதவி மையம்.

சிவகங்கை

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் நலனை அறிய தொடங்கப்பட்ட தகவல் உதவி மையம் திறந்து மூன்று நாட்களாகியும் செயல்படாமல் உள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டுகளில் நோயாளிகளின் உதவியாளர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டு, நோயாளிகளின் நிலைமைக்கு ஏற்ப ஒரு சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மற்றவர்கள் நோயாளிகளின் நலனைத் தெரிந்துகொள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மே 29-ம் தேதி தகவல் உதவி மையம் திறக்கப்பட்டது. இங்கு மருத்துவக் குழுவினர் பணியமர்த்தப்பட்டனர். இந்நிலையில் திறந்து 3 நாட்களாகியும் இந்தத் மையம் செயல்படவில்லை. இதனால் நோயாளிகளின் விவரங்களை அறியமுடியாமல் உறவினர்கள் தவித்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, மைக் அறிவிப்புக்கு ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சிலரை அனுப்புவதாகக் கூறினர். இதுவரை அனுப்பாததால் மையம் இயங்கவில்லை,’ என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x