Published : 23 May 2021 05:51 AM
Last Updated : 23 May 2021 05:51 AM

சட்ட விரோதமான செயல்கள் குறித்து புகார் தெரிவிக்க ‘ஹலோ போலீஸ்’ திட்டம் அறிமுகம்: செங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

ஏ.சுந்தரவதனம்

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஏ. சுந்தரவதனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மதுபான விற்பனை, கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை, மணல் கொள்ளை, சூதாட்டம் மற்றும் கள் இறக்குதல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை பற்றி தகவல் தெரிவிக்க செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடிகண்காணிப்பில் ‘ஹலோ போலீஸ்’(HELLO POLICE) என்ற ஒரு புதியகைப்பேசி எண் பொதுமக்களுக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது.

பொதுமக்கள் 7200102104 என்ற கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டோ எஸ்.எம்.எஸ். வாட்ஸ் ஆப் மூலமாகவோ மேற்படி குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரைப் பற்றி தகவல்களைத் தெரிவிக்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். புகார் தெரிவித்தவுடன் உடனடியாக இதுகுறித்துநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சட்டரீதியாக தண்டிக்கப்படுவார்கள்.

மேலும் புகார் தெரிவிக்கும் நபர்களின் விவரங்களை எக்காரணம் கொண்டும் வெளியிடப்படாது. இத்தகைய சமூக விரோதச் செயல்களைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தந்து உதவுமாறு காவல் துறையின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x