Published : 21 May 2021 03:13 AM
Last Updated : 21 May 2021 03:13 AM

சாலை வரி கட்டுவதில் இருந்து விலக்கு கிடைக்குமா? - ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த வாடகை வேன், கார் ஓட்டுநர்கள்

திருநெல்வேலி

கரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள முழுஊரடங்கு பலதரப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. அதில், சுற்றுலா வேன், கார் ஓட்டுநர்கள் முக்கியமானவர்கள். வாகனங்கள் அனைத்தும் முடங்கியிருக்கும் நிலையில் சாலை வரியை எப்படிக் கட்டுவது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறார்கள். பாளையங்கோட்டை மார்க்கெட் திடலில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள வேன்கள்.

படம்: மு. லெட்சுமி அருண்.இ-பதிவு செய்து வாகனங்களை ஓட்டி சென்றாலும் போலீஸார், சுகாதாரத்துறையினரின் கெடுபிடிகள் அதிகமுள்ளது. இ-பதிவு செய்து, விதிமுறைகளை கடைபிடித்தாலும் அபராதம் விதிப்பது எங்களை மேலும் வேதனைப்படுத்துகிறது.திருமணங்கள் உள்ளிட்ட குடும்ப விசேஷங்கள், கோயில் விழாக்கள், சுற்றுலா போன்றவற்றுகு 12 இருக்கைகளுடன் கூடிய சுற்றுலா வேன்கள் பயன்படுத்தப்படுகின்றன. முகூர்த்த நாட்கள், விழாக் காலங்கள், கோடை விடுமுறை நாட்களில் இந்த வேன் ஓட்டுநர்களுக்கு தொழில் இருந்துவந்தது. ஆண்டில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில்தான் அதிகளவில் வேன் ஓட்டம் இருக்கும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், கடந்த ஆண்டுமுதல் கரோனாவால், வேன் ஓட்டுநர்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது.

கரோனா முதல் அலையின்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது, கோயில் விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள், சுற்றுலா தலங்கள் என்று அனைத்துக்கும் தடைவிதிக்கப்பட்டதுபோல் தற்போது 2-வது அலையின்போதும் தடை நீடிக்கிறது. அனுமதி பெற்று 50 பேர் மட்டுமே பங்கேற்கும் வகையில் திருமணங்களை நடத்திக்கொள்ள லாம் என்பதால் வேன்களை அமர்த்திக் கொள்ள யாரும் முன்வரவில்லை. அதிலும் இ-பதிவு நடைமுறையால் வாகன ஓட்டம் குறைந்துவிட்டது.

வேன்கள் ஓடாமல் அந்தந்த நிறுத்தங்களில் வரிசையாக நிறுத்தப்பட்டிருப்பதை பல்வேறு இடங்களிலும் பார்க்க முடிகிறது. ஓட்டுநர்கள் வருமானமின்றி வேன்களில் அமர்ந்து பொழுதை கழிக்கிறார்கள். இவர்களுக்கு சாலை வரி கட்டுவதற்கு 15 நாட்கள் காலஅவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், வருமானம் ஏதுமின்றி எவ்வாறு சாலை வரியை கட்டுவது என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

பாளையங்கோட்டை மார்க்கெட் திடலைச் சேர்ந்த வேன் ஓட்டுநர்கள் கண்ணீர்விடாத குறையாக கவலை களைக் கொட்டினர். வேன் ஓட்டுநர்கள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் கூறிய தாவது:

கரோனாவால் கடந்த ஆண்டும் தொழில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதும் தொழில் இல்லாமல் அவதியுறுகிறோம். 2013-ம் ஆண்டுக்குப்பின் சுற்றுலா வேன்களுக்கு ஆயுள் வரி செலுத்தியவர்களை தவிர, அதற்கு முன்புள்ள வாகனங்களுக்கு 3 மாதத்துக்கு ஒருமுறை சாலைவரி செலுத்த வேண்டும். வேன்களின் அமைப்பை பொருத்து ரூ.4,500, ரூ.6,000 என்று வரி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 15-ம் தேதிக்குள் இந்த வரியை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது காலக்கெடுவை வரும் 31-ம் தேதி வரை நீட்டித்திருக்கிறார்கள். இந்த காலக்கெடுவுக்குள்ளும் வரியை எங்களால் செலுத்த முடியுமா என்று தெரியவில்லை. காரணம், கடந்த பல மாதங்களாகவே வேன் தொழில் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. வரி செலுத்தாவிட்டால் உரிமத்தை ரத்து செய்துவிடுவார்கள். மறுபடியும் உரிமம் பெறுவதற்கு ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டியிருக்கும்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வேன்களை விற்றுவிட்டு வேறுதொழிலுக்கு செல்லவும் பல ஓட்டுநர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த தொழிலில் உள்ள பிரச்சினைகளை தெரிந்தவர்கள் யாரும் வேன்களை வாங்க தயாராக இல்லை. சாலை வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க அரசு முன்வர வேண்டும். தற்போது, இ-பதிவு செய்து வாகனங்களை ஓட்டி சென்றாலும் போலீஸார், சுகாதாரத்துறையினரின் கெடுபிடிகள் அதிகமுள்ளது. இ-பதிவு செய்து, விதிமுறைகளை கடைபிடித்தாலும் அபராதம் விதிப்பது எங்களை மேலும் வேதனைப்படுத்துகிறது என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x