Published : 13 Jun 2014 09:23 AM
Last Updated : 13 Jun 2014 09:23 AM

திமுக மாவட்டச் செயலாளர்கள் மீது 500-க்கும் மேற்பட்ட புகார்கள்: அறிவாலயத்தில் கடிதக் கட்டுகளுடன் 6 பேர் குழு ஆய்வு

திமுகவில் மாவட்டச் செயலாளர் கள் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், மாவட் டங்களைக் கலைத்து புதிதாக அமைக்க வலியுறுத்தியும், 500க்கும் மேற்பட்ட புகார்கள் கட்சித் தலை மைக்கு வந்துள்ளன. இதன் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க 6 பேர் குழுவுக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் 34 இடங்களில் போட்டி யிட்டு, ஒன்றில் கூட வெற்றி பெறாததால் திமுக தொண்டர் கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். தோல்விக்கான காரணமாக பல்வேறு பிரச்சினை களைக் கட்சியினரும், தொண்டர் களும் திமுக தலைமைக்கு போன் மூலமாக பேசினர்.

இதையடுத்து, தோல்விக்கான காரணம் குறித்தும், கட்சியை வலுப்படுத்துவது குறித்தும், திமுக தலைவர் கருணாநிதி தலை மையில் உயர்நிலைக்குழு கூடி விவாதித்தது. இக்கூட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட தீர்மானத்தின் படி, திமுகவை அமைப்புரீதியாக மாவட் டங்களை அதிகரிப்பது குறித்து, முடிவு செய்யவும், மாவட்ட அளவில் கோஷ்டிகளை ஒழிக்க வும், 6 பேர் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டு குழுவும் அறிவிக்கப் பட்டது.

இந்தக் குழு கடந்த செவ்வாய்க் கிழமை முதல்முறையாகக் கூடி, சுமார் அரைமணி நேரம் விவாதித்து பின்பு கலைந்தது. மாவட்டரீதியான மாற்றங்கள் குறித்து முடிவெடுக்க, ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதி பொறுப் பாளர்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்களது புகார் களை நேரில் திமுக தலைமை யிடம் அளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த வியாழக் கிழமை வரை, சுமார் 500-க்கும் மேற்பட்ட புகார்கள் திமுக தலை மைக்கு வந்துள்ளது. இதில் மாவட்ட செயலாளர்களின் கோஷ் டிப் பிரச்சினைகள், ஒற்றுமை யின்மை, தேர்தலில் சரியாகப் பணி யாற்றாதது, கட்சியில் மற்றவர் களை வளரவிடாதது போன்ற பல்வேறு புகார்களை அடுக்கி யுள்ளனர். இந்தப் புகார்கள் நேரடி யாக திமுக தலைவர் கருணாநிதி யின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. தபாலில் வரும் புகார்கள் 6 பேர் குழுவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் புகார்களைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டப் பிரச்சினைகளை ஆய்வு செய்து, பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இந்த நடவடிக்கைக்கு ஏற்ப வெளிப்படை யான பரிந்துரைகளை அளிக்க வேண்டுமென்றும் 6 பேர் குழு வுக்கு திமுக தலைமை உத்தர விட்டுள்ளதாம்.

இதையடுத்து இக்குழுவினரின் இரண்டாவது கூட்டம் வியாழக் கிழமை நடந்தது. இனி ஒவ்வொரு நாளும் இந்தக் குழு கூடி புகார்களை ஆய்வு செய்து, விரைவில் தலைமைக்கு அறிக்கை அளிக்குமாறு உத்தர விடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x