Published : 06 Jun 2014 12:00 AM
Last Updated : 06 Jun 2014 12:00 AM

அண்ணா பல்கலை. வளாக நேர்காணலில் 2,600 பேர் தேர்வு

அண்ணா பல்கலைக்கழக அளவில் நடத்தப்பட்ட வளாக நேர்முகத் தேர்வில் 2,600 மாணவ, மாணவிகள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு பி.இ., பி.டெக். இறுதி ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழக தொழில் கூட்டு மையம் வளாக நேர்முகத் தேர்வுக்கு (கேம்பஸ் இன்டர்வியூ) ஏற்பாடு செய்திருந்தது.

சென்னை, கோவை, திருநெல் வேலி ஆகிய 3 மண்டலங் களில் நடத்தப்பட்ட வளாக நேர்முகத் தேர்வில் காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ், இன்போசிஸ் நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் 24 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். இதில் இருந்து 2,600 பேர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை மண்டல மாணவர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு பூந்தமல்லி அருகே உள்ள பிரத்யுஷா பொறியியல் கல்லூரியில் நடக்கும் விழாவி லும், கோவை, நெல்லை மண்டல மாணவர்களுக்கு ஜூன் 13-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு கோவை கொண்டாம்பட்டி ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் நடக்கும் விழாவிலும் பணிநியமன உத்தரவு வழங்கப் படுகிறது.

இதுதொடர்பான விவரங்கள் பல்கலைக்கழக இணைய தளத்தில் (www.annauniv.edu) வெளியிடப்பட்டுள்ளன.

கூடுதல் விவரம் பெற...

மேலும் கூடுதல் விவரங்கள் தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் வேலைவாய்ப்பு வழிகாட்டி அதிகாரியை 044-22358994 என்ற தொலைபேசி எண் அல்லது cuic@annauniv.edu என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராஜாராம், பல்கலைக்கழக தொழில் கூட்டு மைய இயக்குநர் டி.தியாகராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x