Published : 26 Apr 2021 03:18 AM
Last Updated : 26 Apr 2021 03:18 AM
கடலூர் அருகே திருவந்தி புரத்தில் உள்ள தேவநாத சாமி கோயில் 108 வைணவத் தலங்களில் முதன்மை பெற்றதாகும். பக்தர் கள் தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்றும், அப்படி திருமணம் நடைபெறும் போது கோயிலில் உள்ள திரும ணக்கூடத்தில் திருமணம் நடத்தி நேர்த்திக்கடன் செலுத்துகிறேன் என்று வேண்டுதல் செய்து கொள் வார்கள். பின்னர் திருமணம் கைகூடினால் , கோயிலில் உள்ள திருமண கூடத்தில் திருமணத்தை நடத்தி நேர்த்திக்கடனை செலுத்து வார்கள். இதன் காரணமாக இக்கோயிலில் முகூர்த்த நாட்க ளில் குறைந்த பட்சம் 100 முதல்அதிகபட்சமாக 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும். மேலும்கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் தனியார் திருமண மண்டபங்கள் அதிக அளவில் உள்ளன.
தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருவதால் தேவநாத சாமி கோயில் எதிர்புறத்தில் உள்ள திருமண கூடத்தில் திருமணம் நடத்த கோயில் நிர்வாகம் தடைவிதித்துள்ளது. கோயில் வளாகத் திற்குள் வர முடியாத அளவிற்கு இரும்பு தடுப்பு கட்டைகள் அமைக் கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று கோயி லைச் சுற்றியுள்ள தனியார் மண்ட பங்களில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் வழக்கம் போல் நடைபெற்றன. இதற்கு உரிய ஆவணங்களை போலீஸாரிடம் காண்பித்து திருமணத்திற்கு அனுமதி பெற்றனர்.
இதனைத் தொடர்ந்து திருமண மண்டபங்களில் அனைத்து சடங்குகளும் நடைபெற்றன. பி்ன்னர் மணமக்கள் ஊர்வலமாக சென்று கோயில் வெளிப்புறத்தில் சாலை யில் நின்று திருமணம் செய்து கொண்டனர். ஒரு சிலர் கோயில் முன்பு உள்ள சாலையில் அனைத்துசடங்குகளும் செய்து திருமணம் செய்து கொண்டனர். அங்கு கூட்டம் கூடாத வகையில் போலீஸார் தொடர்ந்து அறிவுறுத்தினர்.
முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போதும் சுமார் 30-க்கும் மேற்பட்ட திருமணங்கள் திருவந்திபுரம் கோயில் முன்பு உள்ள சாலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT