Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM

புதுச்சத்திரம் பகுதியில் முந்திரி மரங்களில் குலை நோய் தாக்குதல்: விவசாயிகள் கவலை

புதுச்சத்திரம் அருகே வில்லியநல்லூர் பகுதியில் குலைநோய் தாக்குதலுக்கு உள்ளான முந்திரி மரங்கள்.

கடலூர்

புதுச்சத்திரம் பகுதியில் முந்திரி மரங்களில் குலை நோய் தாக்கு தலால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

புதுச்சத்திரம் அருகே உள்ளபால்வாத்துண்ணான், மணிக் கொல்லை, சேந்திரக்கிள்ளை, அன்னப்பன்பேட்டை, ஆண்டார் முள்ளிப்பள்ளம், தச்சன்பாளையம், திருசோபுரம், வில்லியநல்லூர், பேட்டோடை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 300 ஏக்கருக்கு மேல் மானாவாரி நிலத்தில் விவசாயிகள் முந்திரி பயிரிட்டுள்ளனர். தற்போது பூத்துள்ள முந்திரி மரங்கள் குலை நோய் தாக்குதலால் இலைகள், பூக்கள் காய்ந்து பட்டுபோன மரம் போல காணப்படுகிறது. மருந்து தெளித்தும் நோயின் தாக்கம் குறையவில்லை. இதனால் இந்த ஆண்டு முந்திரி விளைச்சல் குறைந்து வருமானம் பாதிக்கும் என்று இப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து இப்பகுதி விவ சாயிகள் கூறுகையில்," முந்திரியில் குலை நோய் தாக்கியுள்ளதால் மகசூல் குறைந்து வருமானம் கடுமையாக பாதிக்கும்.

வேளாண் அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள முந்திரி மரங்களை பார்வையிட்டு நோயை கட்டுப்படுத்திட உரிய ஆலோசனை வழங்கி வேண்டும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x