Published : 22 Apr 2021 03:15 AM
Last Updated : 22 Apr 2021 03:15 AM
விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தேர்தல் அறிவிக்கப் பட்டதால் அப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசுக்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2019 செப்டம்பர் 30-ல் பரிந்துரை செய்தது. அதை யடுத்து, விருதுநகரில் அரசு மருத்துவக்கல்லூரி தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்தது. மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையிலிருந்து 10 கி.மீ. சுற்ற ளவுக்குள் மட்டுமே மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்பதால் விருதுநகரில் மருத்துவக் கல்லூரி தொடங்க ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் 28 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அதே வளாகத்தில் அரசு பல் மருத்துவக் கல்லூரியும் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு மருத்துவக் கல்லூரி அமையும்போது விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையிலும் கூடுதல் சிறப்பு சிகிச்சை பிரிவு களும், கூடுதல் மருத்துவ வசதி களும் ஏற்படுத்தப்பட உள்ளன.
இதற்காக மாவட்ட விளை யாட்டரங்கம் எதிரே உள்ள பெருந்திட்ட வளாக இடம் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க தேர்வு செய்யப்பட்டு அதற் கான அளவீட்டுப் பணிகள் மேற் கொள்ளப்பட்டு, கடந்த 2020 மார்ச் 1-ம் தேதி ரூ.380 கோடியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டு வதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தலைமை வகித்தார். முதல்வர் பழனிசாமி கலந்துகொண்டு பூமி பூஜையைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடங்கள் 10 லட்சத்து 27 ஆயிரம் சதுர அடியில் 18 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு 2021-22-ல் 150 மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இக்கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. கட்டு மானப் பணியில் ஏராளமான கனரக இயந்திரங்கள் மட்டுமின்றி 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் ஈடு படுத்தப்பட்டுள்ளனர். 18 மாதங் களில் கட்டுமானப் பணிகளை முடிக்கத் திட்டமிட்ட அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டு மானப் பணிகள் முடிக்கப்பட்டு தேர்தலுக்கு முன் திறக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், திடீரென தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அத்திட்டம் கைவிடப்பட்டது. அதோடு, கட்டுமானப் பணிகளிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டுமானப் பணிகளை விரைவு படுத்தி இந்த ஆண்டே மருத்துவக் கல்லூரியைத் திறக்க வேண்டும் என்றும், மாணவர்கள் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் கூறுகையில், கரோனா பரவல் காரணமாக கட்டுமானப் பணிகளில் சற்று தொய்வு ஏற் பட்டுள்ளது. கரோனா பரவல் காரணமாக பிளஸ்-2 அரசு பொது தேர்வுகள் எவ்வாறு நடத்தப்படும் என்பதும், அதைத்தொடர்ந்து, இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை இருக்குமா என்பது குறித்தும் தமிழக அரசுதான் அறிவிக்கும் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT