Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 03:18 AM
தமிழகத்தில் ஏப்.10 முதல் 24-ம்தேதி வரையிலும், ஆக.18 முதல் செப்.1-ம் தேதி வரையிலும் நிழல் இல்லா நாள் ஏற்படும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட நாளில் நண்பகலில் சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும். அப்போது நிழல் எந்தப் பக்கமும் சாயாமல் நேராக நமது காலடியில் இருக்கும். செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் அதன் அடியிலேயே விழுவதால் நம் கண்களுக்கு அவை தெரியாது. அந்த நாளை `நிழலில்லா நாள்' அதாவது பூஜ்ய நிழல் நாள் என்கிறோம்.
தமிழகத்தில் தேதி வாரியாக `நிழலில்லா நாள்' ஏற்படும் நகரங்கள் விவரம் வருமாறு:
ஏப்.10, செப்.1-ம் தேதி கன்னியாகுமரி, நாகர்கோவில், கூடங்குளம், ஏப்.11, ஆக 31-ம்தேதிகளில் கோவளம், திருவனந்தபுரம், திருச்செந்தூர், ஏப்.12, ஆக.30-ம் தேதிகளில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ஏப்.13, ஆக.29-ம் தேதிகளில் சங்கரன்கோவில், கோவில்பட்டி, ராமேசுவரம், ராமநாதபுரம், ஏப்.14, ஆக.28-ம் தேதிகளில் கம்பம், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், பரமக்குடி, ஏப்.15, ஆக. 27-ம் தேதிகளில் தேனி, ஆண்டிபட்டி, திருமங்கலம், மதுரை, சிவகங்கை, காரைக்குடி.
ஏப்.16, ஆக.26-ம் தேதிகளில் வால்பாறை, கொடைக்கானல், திண்டுக்கல், புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை, வேதாரண்யம், ஏப்.17, ஆக.25-ம் தேதிகளில் பாலக்காடு, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், உடுமலைப்பேட்டை, பழநி, திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, ஏப்.18, ஆக. 24-ம் தேதிகளில் கோவை, கூடலூர், பல்லடம், திருப்பூர், காங்கயம், கரூர், கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்கால், பூம்புகார்.
ஏப்.19, 23-ம் தேதிகளில் ஊட்டி, கோத்தகிரி, அவினாசி, ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், சீர்காழி, சிதம்பரம், ஏப்.20, ஆக.22-ம்தேதிகளில் முதுமலை, பவானி, மேட்டூர், சேலம், கள்ளக்குறிச்சி, நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், ஏப்.21, ஆக.21-ம் தேதிகளில் தர்மபுரி, சங்கராபுரம், விழுப்புரம், புதுச்சேரி, ஏப்.22, ஆக.20-ம்தேதிகளில் திருவண்ணாமலை, செங்கம், திண்டிவனம்.
சென்னையில்
ஏப்.23, ஆக.19-ம் தேதிகளில் ஒசூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, கடலூர், ஆம்பூர், ஆரணி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கேளம்பாக்கம், ஏப்.24, ஆக.18-ம் தேதிகளில் குடியாத்தம், வேலூர், ஆற்காடு, அரக்கோணம், பெரும்புதூர், திருவள்ளூர், ஆவடி, சென்னை ஆகிய நகரங்களில் நிழல் இல்லா நாட்கள் ஏற்படும்.
இத்தகவலை தமிழ்நாடு அறிவியல் இயக்க விருதுநகர் மாவட்ட துணைத் தலைவர் ரா.மாரியப்பன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT