Published : 04 Apr 2021 03:16 AM
Last Updated : 04 Apr 2021 03:16 AM
நீலகிரி மாவட்டம் உதகை சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளர்மு.போஜராஜனை ஆதரித்து, உதகை காபி ஹவுஸ் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட நடிகை நமீதா பேசியதாவது:
போஜராஜனுக்கு வாக்களித்தால், நீலகிரி மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவுகள் நிஜமாகும். படுகர் சமுதாய மக்களை பழங்குடியினர்பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுப்பார். தேயிலை விவசாயிகள் பயன்பெறும் விதத்தில் தேயிலைக்கு ரூ.30 விலை வாங்கிக் கொடுப்பார். உதகையை சர்வதேச அளவில் சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கைஎடுப்பார். அதிமுக கூட்டணி வெற்றிபெற்றால், 6 சமையல் சிலிண்டர்கள்இலவசம்.
மாதம்தோறும் குடும்பப் பெண்களுக்கு ரூ.1500 வழங்கப்படும். இலவச கேபிள் இணைப்பு வழங்கப்படும். இலவசமாக வீடுகள் கட்டித்தரப்படும். இலவசமாக வாஷிங் மிஷின் வழங்கப்படும். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் உங்கள் வீடு தேடி வரும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கும். முதியோருக்கு ரூ.2000 உதவித் தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT