Published : 02 Apr 2021 03:13 AM
Last Updated : 02 Apr 2021 03:13 AM

ஆட்சியில் இருக்கும்போதே இலவச சிலிண்டர் வழங்காதது ஏன்? - திண்டுக்கல்லில் நடிகை ரோகிணி கேள்வி

திண்டுக்கல் நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த நடிகை ரோகிணி.

திண்டுக்கல்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலவச சிலிண்டர் என்கின்றனர். இதை ஆட்சியில் இருக்கும்போதே வழங்கியிருக்க வேண்டியதுதானே என நடிகை ரோகிணி பேசினார்.

திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் என்.பாண்டியை ஆதரித்து அசோக் நகர், கோவிந்தாபுரம், ஆர்.எம்.காலனி ஆகிய பகுதிகளில் நடிகை ரோகிணி துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருந்து நடிகை ரோகிணி, முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி மற்றும் கட்சியினர் ஊர்வலமாகச் சென் றனர். பேருந்து நிலையம், மாநக ராட்சி அலுவலகம் வழியாக மணிக்கூண்டை ஊர்வலம் சென் றடைந்தது. அங்கு நடிகை ரோகிணி பேசியதாவது: பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கும்போது எட்டுவழிச் சாலை அவசியமா? பல சிறு, குறு விவசாயிகளிடமிருந்து நிலத்தை பறித்து எட்டுவழிச் சாலையை அமைக்க வேண்டிய அவசியம் என்னவென்றால் அது பெரும் முதலாளிகளுக்கானது என்பதால்தான். கல்விக் கொள்கையில் 3-ம் வகுப்பில் பொதுத் தேர்வு என்பதை எந்தத் தாயும் ஏற்றுக் கொள்ள மாட்டார். எட்டு வயது குழந்தையை ஒரு பொதுத் தேர்வுக்கு தயார்படுத் துவது என்பது அம்மாக்களுக்கு எவ்வ ளவு பெரிய மனஅழுத் தத்தை ஏற்படுத்தும். காஸ் சிலிண்டர் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது.

இதன் விலையை குறைப்பேன் என சொல்லாத அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இலவச சிலிண்டர் என்கின்றனர். இதை ஆட்சியில் இருக்கும் போதே வழங்கி இருக்க வேண்டியது தானே. பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக உள்ளதா என்றால் இல்லை. சுத்தமான காற்று வேண்டும் என தூத்துக்குடி மக்கள் கேட்டதற்காக சுட்டுக் கொன்றவர்கள், பாலியல் புகாருக்குள்ளானவர்களை என்ன செய்தார்கள் என்று பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x