Published : 29 Mar 2021 03:16 AM
Last Updated : 29 Mar 2021 03:16 AM
புவனகிரி தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அவரது மனைவி சுமதி சரவணன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
புவனகிரி தொகுதி திமுக வேட்பாளராக தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், திமுக வின் மாநில பொறியாளர் அணி செயலாளருமான துரை.கி. சரவணன் போட்டியிடுகிறார். வேட்பாளர் சரவணன் தொகுதியில் சூறாவளிப் பிரச்சாரம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி னார்.
இந்நிலையில் அவருக்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தப் பட்டது. இதில் வேட்பாளர் சரவணன் சற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவரது மனைவி சுமதி சரவணன் கடந்த 2 நாட் களாக கணவருக்கு ஆதரவாக திமுக மகளிரணி நிர்வாகிகளுடன் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று புவனகிரி பேரூராட்சியில் உள்ள 16 வார்டுகளிலும் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். முன்னதாக புவனகிரி வெள்ளாற்று பாலம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பிரச்சாரத்தை தொடங்கினார். அவருக்கு ஒவ்வொரு வீட்டிலும் உற்சாகமாக ஆரத்தி எடுத்து பொதுமக்கள் வரவேற்பு கொடுத் தனர்.
அப்போது அவர் திமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் செய்வார்கள் என்பதை விளக்கிக் கூறி பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார்.
திமுக மகளிரணியினர், கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர். கணவர் உடல் நலம் குன்றிய நிலையில் மனைவி தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தது பொதுமக்களிடம் அனுதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவருக்கு கரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. இதில் வேட்பாளர் சரவணன் சற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT