Published : 26 Mar 2021 03:16 AM
Last Updated : 26 Mar 2021 03:16 AM

கிடப்பில் உள்ள மருத்துவக் கல்லூரி திறக்கப்படும்; முந்திரி தொழிற்சாலை, காய்கறி குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும்: குறிஞ்சிப்பாடியில் கனிமொழி எம்.பி வாக்குறுதி

குறிஞ்சிப்பாடியில் திமுக வேட்பாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வத்தை ஆதரித்து திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி வாக்கு சேகரித்து பேசினார்.

கடலூர்

குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் எம்ஆர்கே. பன்னீர்செல் வத்தை ஆதரித்து குறிஞ்சிபாடி பேருந்து நிலையத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி பேசியதாவது:

நமது மொழி, கலாச்சாரம், சமூகநீதி, சுயமரியாதை என அனைத் தையும் மீட்க வேண்டிய தேர்தல் இது. அதிமுகவின் பழனிசாமி அரசு தமிழகத்தை டெல்லியில் அடமானம் வைத்து விட்டது. பதவிக்காக மோடி, அமித்ஷா காலடியில் அடமானம் வைத்து விட்டனர். இதனை மீட்டெடுக்க வேண்டியுள்ளது.

‘தவழ்ந்து வந்து பதவி பெறுவதற்கு நான் என்ன பாம்பா!, பல்லியா! ’என கூறும் பழனி சாமி, பதவிக்கு வந்தவுடன் பதவிகொடுத்தவரையே கட்சியில் சேர்க்க மாட்டேன் என்கிறார். ஜெயலலிதா மரணம் விசாரணை என்ன ஆனது எனத் தெரியவில்லை. அதில் மர்மம் இருப்பதாக கூறியஓபிஎஸ் பதவி வந்தவுடன் மாறிவிட்டார். ஆனால், திமுகஆட்சிக்கு வந்தவுடன் உரியவிசாரணை நடத்தி தவறு செய் தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் .

மத்திய அரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு அதிமுகவினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். பெட்ரோல், டீசல், காஸ் விலை எல்லாம் ஏறியது பற்றி கவலைப்படாமல் ‘வெற்றி நடைப் போடும் தமிழகமே!’ என்று கூறி முதல்வர், அமைச்சர்கள் என அனைவரும் வெற்றி நடைப் போட்டு வருகின்றனர்.

தி.மு.க. ஆட்சியில் தொழில் துறையில் 3-ம் இடத்தில் இருந்த தமிழகம் இன்று 16-ம் இடத்திற்கு சென்று விட்டது.

திமுக ஆட்சி நடந்த போது குறிஞ்சிப்பாடி தனி தாலுகாவாக மாற்றப்பட்டது, குறிஞ்சிபாடி தலைமை மருத்துவமனை, 5 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வந்தன. பள்ளிகள் தரம் உயர்த் தப்பட்டன. தொகுதியில் குடி நீர் வசதி செய்து தரப்பட்டது.

இந்த முறை திமுக ஆட்சிக்கு வந்தால் இப்பகுதியில் முந்திரி தொழிற்சாலை அமைக்கப்படும். காய்கறிகளை சேமித்து வைக்ககுளிர் பதன கிடங்கு அமைக்கப் படும். கிடப்பில் போடப்பட்ட அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவ மனை கொண்டு வரப்படும். வட லூர் வள்ளலார் சத்திய ஞான சபையை சர்வதேச மையமாக மாற்றப்படும். இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து கனிமொழி, நெய்வேலி தொகுதியில் போட்டியி டும் திமுக வேட்பாளர் சபா ராஜேந் திரனுக்காக காடாம்புலியூரில் வாக்கு சேகரித்தார்.

முன்னதாக நேற்று காலை பெரியப்பட்டில் சிதம்பரம் தொகுதி திமுக கூட்டணி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் அப்துல் ரஹ்மானை ஆதரித்தும், கீரப்பாளையத்தில் புவனகிரி திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்தும் வாக்கு சேகரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x